ஓமன்
ஓமன் canva
உலகம்

Oman போறீங்களா? - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

Keerthanaa R

பயண பிரியர்கள் எப்போதும் புதிய இடங்களை தேடித் தேடி சென்று, பல அரிய அனுபவங்களை பெற நினைப்பார்கள். அந்த வகையில், உங்களின் அடுத்த டிராவல் டெஸ்டினேஷனாக ஓமனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஓமன் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இருக்க 5 முக்கிய காரணங்கள் இதோ!

கடைவீதிகள் :

மஸ்கட் சென்றால் அங்குள்ள மால் தான் நினைவிற்கு வரும், அதனை மட்டும் பார்த்து விழுந்து விடாதீர்கள். அந்த ஊரின் கடைவீதிகளுக்கு செல்லுங்ள், வரலாற்றை, கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் ரகசியமும், வணப்பும் உள்ள பொருட்கள் அங்கு தான் கிடைக்கும்.

துருக்கிய விளக்குகள், செராமிக் கலைப்பொருட்கள் மஸ்லட்டின் முத்ரா சூக் கடைகளில் பிரபலம். மஸ்கட்டிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து சென்றால், மற்றொரு உள்ளூர் கடைவீதியான நிஸ்வா சூக் இருக்கிறது.

மண்பாண்டங்கள், மசாலா பொருட்கள் கிடைக்கும் கடைகள், காஃபி ஹவுஸ்கள் இங்கு ஏராளம். மறக்காமல், நிஸ்வா கோட்டைக்கும் சென்றுவாருங்கள்!

சுல்தான் கபூஸ் கிராண்ட் மாஸ்க்:

மஸ்கட்டில் அமைந்திருக்கும் இந்த சுல்தான் கபூஸ் கிராண்ட் மசூதி, கட்டிடக்கலையின் தலைச்சிறந்த படைப்பாகும். பாரசீகர்களின் கட்டிடக்கலையின் பாணியில் இந்த மசூதியின் பிரதான பிரார்த்தனை அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்வாரோவ்ஸ்கி சாண்டிலியர் விளக்குகள், வண்ண வண்ண கண்ணாடி சன்னல்கள் கொண்டு இந்த அறை அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவ்வை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

டால்ஃபின்கள்:

மஸ்கட்டின் கடற்கரைகளில் ஸ்பின்னர் டால்ஃபின்களை அதிகம் காணலாம். மஸ்கட் கடற்கரைகளில் ஸ்பீட் போட் ரைட்களும் பிரபலம்.

உணவு:

மனித வாழ்க்கையின் பிரதான தேடல் உணவு தான். ஒரு கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இந்த உணவு பார்க்கப்படுகிறது.

வெவ்வேறு இடங்களுக்கு சென்று அங்கிருக்கும் உணவுகளை ருசிபார்க்கும்போது, அந்த கலாச்சாரத்தின் ஒரு துளியை நம்முடன் எடுத்து வருகிறோம் எனலாம்.

ஓமனின் உணவு வகைகளும் அந்நாட்டின் கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டு தானே? உணவு பிரியர்கள் தவறாமல் செல்ல வேண்டிய இடம் ஓமன்.

ஓமனின் பாரம்பரிய உணவகங்கள் எல்லாவற்றிலும் பரவலாக கிடைக்கும் ஓர் முக்கிய உணவு ஷுவா. இது ஒரு Slow Cooked Meat. மணற்குழிகளில் பல மணி நேரம் சமைக்கப்படும் இந்த உணவு, விசேஷ நாட்களில், கொண்டாட்டங்களின் போது பரிமாறப்படுகிறது. ஒரு பிரபலமான ஸ்நாக்ஸ் தான் மிஷ்காக், இது மஸ்கட்டின் குரூம் அருகில் உள்ள தெருக் கடைகளில் கிடைக்கும்.

ராயல் ஆபரா ஹவுஸ்:

மஸ்கட் நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த ராயல் ஆபரா ஹவுஸில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும். அங்கு சென்றால் தவறாமல் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வாருங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?