Why This Bangladeshi-Pakistani Couple Named Their Kid 'India Twitter
உலகம்

தனது குழந்தைக்கு இந்தியா என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி - என்ன காரணம்?

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் சூட்டியுள்ளனர்.

Priyadharshini R

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒமர் இசா. இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் சூட்டியுள்ளனர். இதற்கான காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து பாடகர் ஒமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை நீண்ட பதிவையும் பதிவிட்டுள்ளார்.

அதில் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவர் மகன் படுத்து உறங்குவது போல ஒரு புகைப்படம் இருக்கிறது,

நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன். எனது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர்.

எங்களுக்கு நடுவில் படுத்திருக்கும் எங்கள் மகன் இப்ராஹிமுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளோம்.

பாகிஸ்தானியருக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கும் நடுவில் படுத்திருப்பதால் அவனை 'இந்தியா' என அழைக்கிறோம்.

'இந்தியா' எனது வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. நகைச்சுவையாக இந்த பதிவை எழுதியதாக ஒமர் இசா விளக்கியுள்ளார். இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?