Mia Khalifa Twitter
உலகம்

மியா கலிஃபாவை அடையாளம் கண்ட கணவர்- மனைவியை சமாதானப்படுத்த தந்த பரிசு

தன் மனைவியுடன் ஹனிமூன் சென்ற இடத்தில் ஒரு நபர் மியா கலிஃபாவை அடையாளம் கண்டுகொண்டுள்ளார். இதனால் அப்செட் ஆன மனைவியை சமாதானம் செய்ய பர்கின் எனும் மிக காஸ்ட்லி பிராண்ட் பேக் ஒன்றை பரிசளித்துள்ளார் அவர்.

Keerthanaa R

சாதாரணமாகவே மனைவிகள் தங்கள் கணவர்கள் வேறொரு பெண்ணை பார்த்தால் பொஸசிவ் ஆகிவிடுவார்கள். இதில் உங்கள் கணவர் பார்த்த பெண் பிரபல நடிகை என்றால்? அதுவும் அவர் மியா கலிஃபா என்றால், அவ்வளவு தான்! சோலி முடிஞ்சு.

இப்படி ஒரு நகைச்சுவையான நிகழ்வு தான் நடந்துள்ளது இந்த கணவருக்கு. தன் மனைவியை அழைத்துக்கொண்டு பாரிஸுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் நடந்துள்ளது இந்த சோகம். பாரிஸில், ஒரு ஹோட்டலின் லாபியில் மியாவை அடையாளம் கண்டுகொண்டவர் உற்சாகத்தில் துள்ளி குதிக்க, இன்னொரு பக்கம் அவரது மனைவியோ, கோபமடைந்துவிட்டார்.

Birkin Bag

இதனால் அவரை சமாதானப்படுத்த, மறுநாள் Birkin எனப்படும் மிக விலையுயர்ந்த Handbag ஒன்றை கணவர் வாங்கிக்கொடுத்துள்ளார். இதை மியா கலிஃபா தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், இவ்வாறு தனக்கு நடந்திருந்தால், தன் மனைவிக்கு முழு ஸ்டோரையும் வாங்கிக்கொடுத்திருந்தாலும் அவரை சமாதானம் செய்திருக்க இயலாது என்றார். இன்னொருவரோ, அதை தவறான பெண்ணிடம் கொடுத்துவிட்டார் என்று கலாய்த்திருந்தார்.

மியா கலிஃபாவை தெரியாதவர்கள் இல்லை. அவர் ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். தற்போது நடிப்பதில்லை என்றாலும் இவரை அடையாளம் காண்பதொன்றும் கடினமல்ல.

மியாவை கண்டுபிடித்ததற்காக அவர் மனைவிக்கு வாங்கிக்கொடுத்த Birkin Bagன் விலை சுமார் 7லிருந்து 10 லட்சமாம்.

மியா கலிஃபாவை தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை, அதைக் காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?