Woman asked by co-passenger to switch off movie onboard flight to avoid spoilers Twitter
உலகம்

முதல் விமான பயணத்திலேயே மோசமான அனுபவம்; சக பயணியை சமூக வலைத்தளத்தில் திட்டி தீர்த்த பெண்

இந்த 2 மணிநேர விமானத்தில் கிட்டதட்ட 8 அல்லது 10 முறை இவ்வாறு தன்னை தொந்தரவு செய்ததாக அந்த பெண் ரெடிட்டில் கூறியிருந்தார்.

Priyadharshini R

விமானத்தில் முதன்முறையாக மோசமான அனுபவத்தை சந்தித்த ஒரு பெண், அதை ரெடிட்டில் ஒரு போஸ்ட்டாக பகிர்ந்துள்ளார்.

இது இணையவாசிகள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது. இதுவரை சாலை மார்கமாகவே பயணித்த பெண் ஒருவர் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்தார்.

அவரின் முதல் விமான பயணமே அவருக்கு ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

வேலை காரணமாக விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய அந்த பெண் பாதையோர இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

தனது இரண்டு மணி நேர விமான நேரத்தை கடக்க டாம் ஹாலண்ட் மற்றும் மார்க் வால்ல்பெர்க் நடித்த Uncharted திரைப்படத்தைப் பார்க்க முடிவு செய்தார்.

திரைப்படம் ஆரம்பித்து,10 நிமிடங்களுக்குப் பின் பக்கத்து சீட்டில் இருந்த சக பயணி, தனக்கு திரைப்படத்தைப் ஸ்பாய்லர்கள் செய்ய வேண்டாம் எனக் கூறி படத்தை ஆஃப் செய்ய சொல்லியிருக்கிறார்.

ஆனால் தான் இந்த படம் தான் பார்க்க விரும்புவதாக சக பயணிக்கு பதிலளித்தார் அந்த பெண். இருப்பினும் புகார் அளிக்க முற்பட்ட சக பயணியின் நடவடிக்கையை கண்டுக் கொள்ளாமல் படத்தை தொடர்ந்து பார்க்க தொடங்கிவிட்டார்.

Flight

தொடர்ந்து திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த பயணி விமானத்தில் கழிவறையைப் பயன்படுத்த எழுந்த ஒவ்வொரு முறையும் 'தற்செயலாக' தன்மீது மோதுவதை போன்று நடந்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த 2 மணிநேர விமானத்தில் கிட்டதட்ட 8 அல்லது 10 முறை இவ்வாறு என்னை தொந்தரவு செய்ததாக அந்த பெண் ரெடிட்டில் கூறியிருந்தார்.

சக பயணியின் இந்த நடத்தை குறித்து நெட்டிசன்கள் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?