Woman claims landlord charges her Rs 12k and Rs 930 as monthly ‘pet rent’ for keeping a goldfish Twitter
உலகம்

மீன் வளர்த்ததற்காக கூடுதல் வாடகை: வைரலாகும் ஹவுஸ் ஓனரின் அட்ராசிட்டி - எங்கே?

நிக் தனது தங்கமீனை வளர்ப்பதற்காக தனது வாடகையுடன் சேர்த்து ரூ.1,239 அதிகமாக கொடுக்க வேண்டும் என்று வீட்டு உரிமையாளர் நிபந்தனை விதித்துள்ளார்.

Priyadharshini R

ஒரு பெண், ’செல்லப் பிராணிகளுக்கான வாடகை’ என்று மாதம் 15 டாலர் கூடுதலாக வீட்டு உரிமையாளர் தன்னிடம் வசூலித்ததாக பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த வோல்கர், TiKTok இல் இதைப் பற்றிய வீடியோவை வெளியிட்ட பிறகு இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிக், ஒரு vlogger. வித்தியாசமான இடங்களுக்கு சென்று அது குறித்து விளக்கி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவது இவரின் வேலையாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் டிக்டாக்கில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இவர் அமெரிக்காவில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். ஆரம்பத்தில் இவருக்கு வீடு கொடுக்க ஹவுஸ் ஓனர்கள் மறுத்திருக்கிறார்கள்.

பெரும்பாலான ஹவுஸ் ஓனர்கள், செல்லப்பிராணிகளை வைத்திருந்தால் வீடு கொடுக்க மாட்டார்கள். அதேபோல இவருக்கும் வீடு தர மறுத்திருக்கிறார்கள். ஆனால் இவர் ஒரே சிறிய தங்க மீன்தான் வைத்திருக்கிறார்.

கடைசியாக ஒரு வீடு கிடைத்திருக்கிறது, அதுவும் நிபந்தனைகளுடன் நிக் தனது தங்கமீன் வளர்ப்பதற்காக வாடகையுன் கூடுதலாக 15 டாலர் ரூ.1,239 கொடுக்க வேண்டும் என்று ஹவுஸ் ஓனர் நிபந்தனை விதித்துள்ளார்.

இந்த வீட்டையும் விட்டுவிட்டால் வேறு வீடு கிடைக்காது என்பதால் நிக் இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த வாடகை ரசீதை அவர் டிக்டாக்கில் பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது. பலரும் இதற்கு எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மீன் எந்த விதத்தில் ஹவுஸ் ஓனருக்கு தொந்தரவாக இருந்துவிட போகிறது? என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?