தனது எச்சிலை பாட்டிலில் நிரப்பி விற்று வருகிறார் 22 வயது பெண்ணான லதீஷா ஜோன்ஸ். இதனையே தனது முழு நேர தொழிலாக மாற்றிக்கொண்டவர், மாதம் 41 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறார்!
மான்செஸ்டரில் பயோமெடிக்கல் சயின்ஸ் படித்து வரும் மாணவி லதீஷா. மருத்துவர் ஆக வேண்டும் என்பது லதீஷாவின் லட்சியம். அதற்காக அவர் டெஸ்கோ என்ற இடத்துக்கு இடம்பெயர்ந்தார்.
அங்கு பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார்.
மிரர் தளத்தின் அறிக்கையின் படி, லதீஷா வித்தியாசமான கோரிக்கைகள் வைக்கும் இணையதள் ஒன்றை பார்த்துள்ளார்.
அங்கு தான் அவரிடம் ஒருவர் லதீஷாவின் எச்சிலை விலைக்கு கேட்டுள்ளார். முதலில் அந்த நபர் ஜோக் செய்கிறார் என்று நினைத்தாராம் லதீஷா.
அப்பெண்ணின் எச்சிலை வாங்க அவர் முன்வந்ததோடு அல்லாமல், அதற்கு, 30,000 முதம் 1.5 லட்சம் ரூபாய் வரை பணம் தரவும் தயாராக இருந்தார்.
லதீஷாவும் எச்சிலை விற்றார். இந்த வித்தியாசமான கோரிக்கையையே அவர் தன் தொழிலாக மாற்றிக்கொண்டார்
லதீஷாவின் எச்சிலுக்கு டிமாண்ட் அதிகரித்தது. அது மட்டுமல்ல, லதிஷா பயன்படுத்திய ஒரு வாரம் பழைய பெட் ஷீட், அவரது வியர்வை தோய்ந்த உடை, வெட்டப்பட்ட கால் நகம், அவர் குளித்த தண்ணீர் போன்றவற்றையும் அவரது வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்.
இப்படி தனது எச்சில் போன்றவற்றை விற்று தன் கடன்கள் அனைத்தும் அடைத்துவிட்டார் லதீஷா.
தான் பகுதி நேரமாக பார்த்துவந்த வேலையயும் விட்டுவிட்டார். தான் சம்பாதித்த பணத்தை வைத்து, சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust