பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் இருக்கும் சிறை கைதி ஒருவரை திருமணம் செய்யவுள்ளார். அதுவும் காதலித்து! இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால், இவர்கள் இருவரும் இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்தித்துக்கொண்டதில்லை.
காதல் கோட்டை படத்தில் வரும் சூர்யா-கமலி போல இவர்களும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலேயே காதல் வயப்பட்டுள்ளனர்.
லாரா ஓ சல்லிவன் என்ற அந்த பெண் டெர்ரெல் ரேவன் ரீஸ் என்பவரை கைதிகளையும், அவர்களுக்காக கடிதம் எழுதுபவர்களையும் இணைக்கும் ஒரு செயலி மூலம் சந்தித்துள்ளார். வெறும் கடிதங்கள் வாயிலாக மட்டுமே துவங்கிய இவர்களது உரையாடல், நாளடைவில் நட்பாகவும், பின் காதலாகவும் மாறியது.
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரீஸ் கேட்டபோது தன்னால் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று லாரா குறிப்பிட்டிருந்தார். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் இவர்களது திருமணம், சிறையில், குறிப்பிட்ட நபர்களின் முன்னிலையில் தான் நடக்குமாம்.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான லாரா, தனது மூத்த மகனை கவனித்துக்கொள்ள ஒரு பகுதி நேர கேர்டேக்கரை ஏற்பாடு செய்துவருகிறார். இதன் மூலம் தான் அமெரிக்காவில் இருக்கும் டெர்ரெலை சந்திக்க முடியும் என்கிறார் லாரா.
2009 ஆம் ஆண்டு ஜஸ்டின் சாலமன் என்ற 19 வயது இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் இரண்டாம் நிலை குற்றவாளியாக கைது செய்யப்பட்ட டெர்ரெலுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது. சாலமனை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளி தப்பிய நிலையில், டெர்ரெல் கைது செய்யப்பட்டார்.
இவை அனைத்தும் அறிந்த பின்னரும், டெர்ரெல் மீது காதல் வயப்பட்டதால், லாரா அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்னர், கெல்லி ஜெகப்ஸ் என்ற பெண், ஜேம்ஸ் டென்டல் என்ற சிறை கைதியை காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust