இந்த உலகில் சுமார் 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஏழை, பணக்காரன், ஜாதி, மதம், நாடு, இனம், மொழி, கலாச்சாரம் கடந்து எல்லா மக்களுக்கும் ஏதோ ஒரு பொருள், ஒரு விஷயம், சேவை, உணவு... என ஏதோ ஒன்றின் மீது ஒரு வித காதல் அல்லது ஈர்ப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதில் சில விஷயங்களைப் பாலினங்களுக்கு இடையில் பிரித்துப் பார்க்கலாம். அது சரியா, தவறா என்பது விவாதத்துக்கு உட்பட்டது. உதாரணமாக பைக், கார்கள் போன்றவை ஆண்களுக்கும், வித வித ஆடைகள், பர்பி பொம்மை போன்றவை பெண்களுக்குப் பிடிக்கும் எனலாம்.
அப்படி பார்பி பொம்மை மீது பெருங்காதல் கொண்ட, ஆஸ்திரியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன் உடல் அமைப்புகளை எல்லாம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பார்க்க பார்பி பொம்மை போலவே வாழ்ந்து வருகிறார். அதற்கு லட்சக் கணக்கில் பணத்தையும் செலவழித்துள்ளார்.
21 வயதான ஜெசிகா, தன் உடல் பாகங்களை எல்லாம் அறுவை சிகிச்சை மூலம் மாற்றி, பார்க்க ஒரு உயிருள்ள பார்பி பொம்மை போல இருக்க இதுவரை சுமார் 53 லட்சம் ரூபாயை செலவழித்திருக்கிறார்.
ஜெசி பன்னி அஃபிஷியல் (jessy.bunny.official) என்கிற பெயரில் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் இவர், சுமார் மூன்று ஆண்டு காலமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு தற்போது இந்த உடல் அமைப்புகளோடு இருப்பதாக அவரே கூறியுள்ளார்.
18 வயதிருக்கும் போது ஜெசிகா தன் உடலை மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சைகளைச் செய்து கொள்ளத் தொடங்கினார் என பல்வேறு செய்தித் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை ஜெசிகா மூன்று முறை மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதோடு ஒரு முறை மூக்குப் பகுதியிலும், உதடு மற்றும் புட்டத்தைப் பெரிதாக்கும் மருத்துவ நடைமுறைகளைப் பல முறையும் மேற்கொண்டுள்ளார்.
தற்போது இருப்பது போலவே தொடர ஜெசிகாவுக்கு விருப்பமில்லை. இன்னும் தன்னுடைய உடலில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறாராம்.
தன் உடலை, தனக்குப் பிடித்தது போல் மாற்றிக் கொண்டதில் ஜெசிகா பெருமகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அவரது குடும்பம், இந்த அறுவை சிகிச்சைகள் மற்றும் உடல் அமைப்பு மாற்றங்களில் மகிழ்ச்சி கொள்ளவில்லை.
தன் குடும்பத்தினரை அழைக்கும் போதெல்லாம், அழைப்பு துண்டிக்கப்படுவதாகவும், குறுஞ்செய்தி அனுப்பினால் அது கண்டு கொள்ளப்படாமல் போவதாகவும் கூறுகிறார் ஜெசிகா.
என் உடலை மாற்றிக் கொண்டதற்காக, என் குடும்பத்தினர் என்னோடு பேசுவதில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது என ஜெசிகாவே ஹுடே (Heute) என்கிற ஊடகத்திடம் கூறியுள்ளார்.
உடல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன், ஜெசி தன் உடலமைப்பின் மீது பெரிய நம்பிக்கையின்றி இருந்தார். தன் உடலை மாற்ற வேண்டும் என்றும் விரும்பினார். ஓட்டுநர் பள்ளியில் படிக்க, ஜெசியின் பெற்றோர் கொடுத்த பணத்தில் தான், ஜெசி தன் முதல் உடல்பாக மாற்று மற்றும் அழகுபடுத்தல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பல்வேறு உடல் அழகுபடுத்தல் சிகிச்சைக்குப் பிறகு, தன்னம்பிக்கையாக உணர்வதாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக, மார்பகத்தைப் பெரிதாக்கும் முதல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தன்னுடைய நம்பிக்கை பெரிய அளவில் அதிகரித்ததாகக் கூறியுள்ளார்.
ஆஸ்திரியாவிலேயே மிகப் பெரிய சிலிகான் மார்பகம் கொண்டவள் என்கிற பட்டம் மட்டும் எனக்குப் போதாது. இந்த நாட்டிலேயே மிகப் பெரிய உதட்டையும் பெற விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார் ஜெசிகா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu