Krishna Mandal
Krishna Mandal Twitter
உலகம்

நாடு கடந்த காதல்; வங்காளதேசம் முதல் இந்தியா வரை நீந்தி வந்த இளம் பெண் - என்ன நடந்தது?

Antony Ajay R

காதலரைத் திருமணம் செய்துகொள்வதற்காக வங்காளதேசத்தைச் சேர்ந்த இளம் பெண், ஒரு மணி நேரம் நீச்சல் அடித்து இந்தியா வந்து சேர்ந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த 22 வயது பெண் கிருஷ்ணா மந்தல். இவர் அபிக் மந்தல் என்ற இந்தியரை முகநூலில் சந்தித்துப் பழகியிருக்கிறார். இருவருக்கும் காதல் மலர, திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் கிருஷ்ணாவிடம் எல்லைத் தாண்டிச் செல்ல பாஸ்போர்ட் இல்லை. சட்டவிரோதமாக எல்லையைத் தாண்ட முடிவு செய்திருக்கிறார் கிருஷ்ணா மந்தல்.

தனது காதலரின் கரம் பிடிப்பதற்காக கிருஷ்ணா துணிவுடன் வங்காள புலிகள் அதிகம் வாழும் சுந்தராவன காடுகளுக்குள் நுழைந்திருக்கிறார். ஆற்றின் வழியே ஒரு மணிநேரம் நீந்தி இந்தியா வந்திருக்கிறார். மூன்று நாட்கள் முன்பு கிருஷ்ணா அவரது காதலரான அபிக்கை கொல்கத்தாவிலுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டார். எனினும் கடந்த திங்கள் கிழமை அவரை காவலர்கள் கைது செய்தனர்.

கிருஷ்ணா பங்களாதேஷ் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நீச்சல் மூலம் இந்தியா வந்து சாக்லேட் வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காதல் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் மட்டுமல்ல நாட்டையும், எல்லைகளையும் கடந்தது என்பதற்கு இந்த இளம்பெண்ணின் காதல் சாட்சி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?