உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. முன்னெல்லாம், பசிக்கு மட்டுமே நாம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது உணவை ரசித்து, அங்கீகரித்து, காதலித்து உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகரித்துவிட்டது.
அதிகம் சாப்பிடுபவர்களைக் கேலி செய்வதும் வழக்கொழிந்து விட்டது. பிடித்த உணவை அடிக்கடி சாப்பிடுவோம். புதிய உணவு வகைகளையும் தேடித் தேடி சாப்பிடுவோம்.
ஆனால், ஒருவர் ஒரே வகையான உணவை, தான் இதுநாள் வரை வாழ்ந்த காலத்தில் சாப்பிட்டு வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? யுனைடட் கிங்கடமை சேர்ந்த ஜோ சாண்ட்லர் என்ற 25 வயது பெண் ஒருவர், 23 ஆண்டுகளாக வெறும் கிரிஸ்ப் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்துள்ளார்.
இவரது தாயார் இவருக்கு மற்ற உணவைப் பழக்க முயன்று தொற்றப்பின், தினமும் இந்த கிரிஸ்ப் சாண்ட்விசையே சாப்பிட்டு வந்துள்ளார் ஜோ.
"பள்ளிக்குச் செல்லும்போதும் மதிய உணவுக்கு கிரிஸ்ப் சாண்ட்விச்சை மட்டும் தாம் அம்மா கட்டி தந்திருக்கிறார்" என்று நினைவு கூறிய ஜோ, காலை உணவுக்கு ஓட்ஸ் (cereal), மற்றும் மதியம், இரவில் சாண்ட்விச் உண்பாராம். இந்த கிரிஸ்ப் சாண்ட்விச்சையே பல சுவைகளில் சாப்பிடுவாரே தவிர, மற்ற உணவுகளை இதுவரை சாப்பிட்டதில்லையாம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிடைக்கும் உணவுகளையும் இதுவரை உண்டதில்லை. வெறும் புட்டிங்கை மட்டும் எடுத்துக்கொள்வாராம்.
தற்போது மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற நோயால் பாதிக்கபட்டுள்ளதாக கண்டறிந்த ஜோ, தன் உடல்நலத்தை காக்க மற்ற உணவுகளை உட்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
தன் ஹிப்னோதெரபிஸ்ட் டேவிட் கிலமரியின் உதவியுடன் வசிய சிகிச்சை மேற்கொண்டு இப்போது மற்ற சில உணவுகளையும், பழங்களையும் ருசித்து வருகிறார். விரைவில் அனைத்து வகை உணவுகளையும் பயமின்றி உட்கொள்ள தொடங்கிவிடுவார் என்று ஜோவிற்கு சிகிச்சை அளித்த டேவிட் கூறியுள்ளார்.
டேவிட் கூறுகையில் ஜோ Avoidant/restrictive food intake disorder (ARFID) என்ற ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதாவது, தெரிந்த, பழகிய உணவுகளை மட்டுமே உண்பது. புதிய வகை உணவுகளைக் கண்டால் அச்சம் ஏற்பட்டு, உண்ணாமல் இருப்பது தான் இந்த ஃபோபியா.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இவர், சீக்கிரம் தன் பயத்தை விட்டு வெளியேறிப் பல வகை உணவுகளைச் சாப்பிட விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இவரை போல்வே சம்மர் மோன்ரோ என்ற பெண் 22 வருடமாக சிப்ஸை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu