Bed ஐ Bread போல சாப்பிடும் விநோத பெண் - 20 ஆண்டுகளாக தொடரும் பழக்கம் - எங்கே? Youtube
உலகம்

Bed ஐ Bread போல சாப்பிடும் விநோத பெண் - 20 ஆண்டுகளாக தொடரும் பழக்கம் - எங்கே?

Keerthanaa R

கிட்டதட்ட 20 வருடங்களாக மெத்தையை சாப்பிடும் விநோத பழக்கத்தை கொண்டுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர். அவருக்கு 5 வயது இருக்கும்போது இந்த பழக்கம் முதன்முதலில் தோன்றியதாக அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

நம் எல்லோருக்குமே வெளியில் சொல்லமுடியாத வித்தியாசமான பழக்கவழக்கங்கள் இருக்கும். ஒரு சிலருக்கு இது அவ்வப்போது தான் தோன்றும், சிலரோ அந்த பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பார்கள்.

அந்த வகையில், மெத்தையை கடித்து சாப்பிடும் பெண் ஒருவரின் கதை நம் கவனத்திற்கு வந்துள்ளது

My Strange Addiction என்ற நிகழ்ச்சிக்கு அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் என்ற பெண் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சுமார் 20 வருடங்களாக மெத்தையை சாப்பிடும் விநோத பழக்கத்திற்கு தான் அடிமையாகியிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இவரது அன்றாட உணவு பழக்கம் குறித்த தகவல்கள் இல்லை

அவருக்கு ஐந்து வயது இருந்தபோது, தற்செயலாக கார் சீட்டில் இருக்கும் ஸ்பாஞ்சுகளை சாப்பிட ஆரம்பித்துள்ளார். ஆனால், அவர் அதற்கு அடிமையாவார் என்று எதிர்பார்க்கவில்லை.

”சிக்கன சேனக் கிழங்குனு சொல்லி பிரண்ட்ஸ் ஊட்டி விட்டாங்க, டேஸ்ட் நாக்குல ஒட்டிக்கிச்சு” என்று ஜோதிகா கூறுவதுபோல, மெத்தையின் சுவைக்கு அடிமையானவர், தொடர்ந்து மெத்தைகளில் உள்ள ஸ்பாஞ்சுகளை உண்ணத் தொடங்கினார். ஒரு நாளைக்கு ஒரு சதுரடி மெத்தையை அவரால் சாப்பிட முடியும்.

தன் மெத்தையை சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு முறை, தனது தாயின் மெத்தையை சாப்பிடத் தொடங்கியுள்ளார். மேலும் இவர் அந்த மெத்தையை எப்படி சாப்பிடுவார் என்றும் விவரித்திருந்தார்.

தலையணை நுணியில் தொடங்கி மெல்ல இறுதிவரை சாப்பிட்டு முடிப்பேன் என சொல்லும் ஜெனிஃபர், மெத்தையுடன் மயோனைஸோ அல்லது வெண்ணெயோ சேர்த்து சாப்பிட தனக்கு பிடிக்காது என்றும் கூறினார்.

“நான் சாப்பிடும் ஸ்பாஞ்சில் கெட்ட வாடை அடித்தால் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன்” என்கிறார் ஜெனிஃபர்.

அதிர்ஷ்டவசமாக அவருக்கு இதனால் உடல்நலக் குறைவு எதுவும் இதுவரை ஏற்பட்டதில்லை. ஆனால், இந்த நிலை தொடர்ந்தால், வெகு சீக்கிரத்தில் அவரது கல்லீரல் பாதிக்கப்படும் மற்றும் குடல் அடைப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

ஆனால், இதைப் பற்றி ஜெனிஃபர் கவலைக் கொள்வதாக தெரியவில்லை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?