global dream ship Twitter
உலகம்

அல்லு சில்லாக உடைய போகும் கப்பல் - என்ன காரணம் தெரியுமா?

Govind

“கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளலார் பாடினார். அது போல உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பல் ஒன்றை வாங்குவதற்கு ஆளில்லை.

இந்நிலை நீடித்தால் இக்கப்பல் பழைய இரும்பு கடைக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த செய்தியை உலகின் சொகுசுப் பயணக் கப்பல் தொழில் குறித்து நடத்தப்படும் ஆன்போர்டு - An Bord பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலின் பெயர் குளோபல் ட்ரீம் 2. கொள்ளளவில் உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலாக இருக்க வேண்டிய இக்கப்பல் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. இதை வாங்குவதற்கு ஆளில்லை என்பதாகத் திவாலான கப்பல் கட்டும் நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

global dream ship

இக்கப்பல் ஜெர்மனி நாட்டின் பால்டிக் கடற்கரையில் உள்ள எம்வி வெர்ஃப்டன் கப்பல் கட்டும் தளத்தில் இருக்கிறது. இக்கப்பலை விற்க நினைத்த கப்பல் கட்டும் தளத்தின் நிர்வாகியின் பெயர் கிறிஸ்டோஃப் மோர்கன். அவரது கூற்றுப்படி இக்கப்பலுக்கு வழங்கப்பட்ட எந்திரங்கள், கருவிகளில் பெரும்பாலானவை விற்கப்பட இருக்கிறது. செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மோர்கன் இக்கப்பல் பழைய இரும்பு தொழிலுக்கு விற்கப்பட இருப்பதைத் தெரிவித்தார்.

மோர்கனின் கவனம் இக்கப்பலின் சகோதரக் கப்பலான குளோபல் ட்ரீம் மீது உள்ளது. இந்த சகோதரக் கப்பல் வடக்கு ஜெர்மனியின் விஸ்மரில் உள்ள கப்பல் கட்டும் தளத்திலிருந்து மிதக்கத் தயாராக இருக்கிறது என ஆன்போர்டு பத்திரிகை தெரிவிக்கிறது.

global dream ship

கப்பல் கட்டும் நிறுவனமான எம் வி வெர்ஃப்டன் விஸ்மர் மற்றொரு நிறுவனத்திற்கு விற்கப்பட இருக்கிறது. வாங்கும் நிறுவனத்தின் பெயர் தைசன்கிரப் ஏஜி. இது கப்பற்படைக்கான கப்பல்களைக் கட்ட திட்டமிட்டிருக்கிறது.

தற்போது உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை ரஷ்யா நடத்தி வருவதால் இராணுவ ரீதியான கப்பல்களுக்குச் சந்தை இருக்குமென இந்நிறுவனம் நினைக்கிறது. 2024ஆம் ஆண்டிலிருந்து இத்தளத்தில் உருவாக்கப்படும் போர்க்கப்பல்கள் விற்கப்பட இருக்கின்றன.

இப்போது குளோபல் ட்ரீம் பயணக் கப்பலுக்கு வருவோம். இரண்டு குளோபல் ட்ரீம் கப்பல்களும் ஆசியாவைச் சார்ந்த டிரீம் பயணக் கப்பல் நிறுவனத்திற்காகக் கட்டப்பட்டது. இந்த ட்ரீம் பயணக் கப்பல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹாங்காங்கைச் சார்ந்த ஜென்டிங் ஹாங்காங் நிறுவனம் கோவிட் பொது முடக்கத்தால் திவாலானது.

global dream ship

இதன் தொடர்ச்சியாகவே குளோபல் ட்ரீம் கப்பலைக் கட்டும் திட்டம் குளறுபடியானதாக ஆன் போர்டு பத்திரிகை தெரிவிக்கிறது. ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டெனா ஏபி எனும் நிறுவனம் இக்கப்பல்களை வாங்க ஆர்வமாக இருந்தாலும் அதற்குள் ஜென்டிங் நிறுவனம் திவாலானது.

அப்போதுதான் சீனா கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை உறுதி செய்ததாக ஆன் போர்டு தெரிவிக்கிறது. மேலும் தென் சீனக் கடல் பகுதியும் பதட்டமாக இருந்து வருகிறது. குளோபல் ட்ரீம் கப்பல் உலகின் எந்த இடத்திற்கும் இழுவைகள் மூலம் இழுத்துச் செல்லப்படலாம். வரவிருக்கும் நாட்களில் இக்கப்பலைப் பழைய இரும்பு தொழில் நடத்தும் நிறுவனங்கள் வாங்கவில்லை என்றால் கப்பல் ஏலத்திற்கு வரும் செயல் முறை துவங்கப்படும். அதன் மூலம் உலகில் உள்ள பல்வேறு தரகர்கள் ஏலத்தில் பங்கு பெற்று இக்கப்பலை வாங்குவார்கள்.

இப்படிப் பல பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட உலகின் பெரும் பயணக் கப்பல் தனது முதல் கடற்பயணத்தைக் கூட துவக்காமல் இப்படி பழைய இரும்பு விலைக்கு விற்கப்பட இருப்பது சோகமான ஒன்று. கோவிட் அலையில் அடித்தும் செல்லப்பட்ட தொழில்களில் இக்கப்பல் கட்டும் தொழிலும் ஒன்று.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?