Titanic  NewsSense
உலகம்

டைட்டானிக் தெரியும் : உலகை உலுக்கிய இந்த கப்பல் விபத்துகள் குறித்து தெரியுமா?

டைட்டானிக்கை தவிர்த்து உலக வரலாற்றில் நடுநடுங்க வைக்கும் இன்னும் சில கப்பல் விபத்துகளும் நடந்திருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்

Keerthanaa R

கடற்பயணங்கள் எவ்வளவு அழகானவையோ அதே அளவு ஆபத்து நிறைந்தவையும் கூட. கப்பல் விபத்துகள் ஏற்படுவது குறித்து நாம் கேள்விப்படாமல் இல்லை. கப்பல் என்றாலோ, கப்பல் விபத்து என்றாலோ முதலில் பொறித்தட்டுவது டைட்டானிக் தான்.

அதன் முதல் பயணத்திலேயே பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளானதில், 1500க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் டைட்டானிக் என்ற பெயரில் படமெடுக்கப்பட்டது. இந்த படத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது.

ஆனால், டைட்டானிக்கை தவிர்த்து உலக வரலாற்றில் நடுநடுங்க வைக்கும் இன்னும் சில கப்பல் விபத்துகளும் நடந்திருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்

எம் வி வில்ஹெம் கஸ்ட்லாஃப்

நாஜிப் படையினர் தங்களது பெருமையாக கருதிய கப்பல் இந்த எம் வி வில்ஹெம் கஸ்ட்லாஃப் கப்பல். ஜெர்மன் பணியாளர்களின் கேளிக்கைக்காக கட்டப்பட்டது இந்த கப்பல். 1939ல் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய பிறகு, இது காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் கப்பலாக மாற்றப்பட்டது. போர் முடிவடையும் சமயத்தில், கிழக்கு பெர்சியாவிலிருந்து சோவியத் படைகள் தாக்குதலிலிருந்து தப்பிக்க, இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், கப்பலில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த துருப்புக்கள் மற்றும் டெக்கில் இருந்த துப்பாக்கிகள் அதை ஒரு எளிய ராணுவ இலக்காக மாற்றியிருந்தது

கடந்த ஜனவரி 30 1945 ஆம் ஆண்டு, 1900 பேரை மட்டுமே தாங்கக்கூடிய திறனிருந்த இந்த கப்பலில் 10,000 பேர் பயணித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக கப்பல் புறப்பட்ட துறைமுகத்தின் மீது சோவியத் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்களை நடத்தியது. மூன்று டார்பீடோக்கள் ஏவப்பட்டன. ஏற்கனவே குளிர் அதிகமாக இருந்தபடியால் கப்பலிலிருந்த லைஃப்போட்களும் செயலிழந்தன.

இப்படியான ஆபத்தான சமயங்களில் மக்களை வெளியேற்ற பயிற்சிகள் அளிக்கப்பட்ட கப்பல் குழுவினரும் டார்பீடோ தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர். தாக்குதல் ஏற்பட்டு கிட்ட தட்ட ஒரு மணி நேரத்தில் கடலில் மூழ்கியது கஸ்ட்லாஃப் கப்பல். உடனடியாக மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டாலும், கிட்ட தட்ட 9000 பேர் இதில் உயிரிழந்தனர்.

இது வரலாற்றில் பதிவான மிகப் பெரிய கப்பல் விபத்தாகும்.

ஆர் எம் எஸ் லூசிடானியா:

முதலாம் உலகப் போரின் போது ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு, அமெரிக்கா உலகப்போரில் பங்கேற்க முக்கிய காரணம் என, ஆர் எம் எஸ் லூசிடானியா கப்பல் விபத்தை கூறலாம்.

மே 7 1915ஆம் ஆண்டு ஒரு ஜெர்மன் யூ கப்பலால் தாக்கப்பட்டு வெறும் 18 நிமிடங்களில் இந்த கப்பல் சிதைந்தது. இங்கிலாந்துக்கு சொந்தமான இந்த கப்பலில் போர் ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக ஜெர்மனியர்கள் நம்பியதால் இதனை தாக்கினர்.

பயணிகளுக்கு தங்களது பயணத்தில் எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்று முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்தது. கப்பலில் பயணித்த 128 அமெரிக்கர்கள் உட்பட 1,198 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்

எஸ் எஸ் சுல்தானா

அமெரிக்க வரலாற்றில் நடந்த அதிபயங்கரமான கப்பல் விபத்துகளில் ஒன்று இந்த எஸ் எஸ் சுல்தானா. அமெரிக்க சிவில் போர் முடிவடைந்திருந்த காலம், ராணுவ சிறைகளில் சித்திரவதை அனுபவித்துவிட்டு விடுவிக்கப்பட்ட யூனியன் போர்க்கைதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப மிகுந்த ஆர்வத்தோடு இருந்தனர். அரசு இவர்களை கூட்டிச்செல்ல கப்பல் ஆப்பரேட்டர்களுக்கு பெருந்தொகைகளை வழங்கியது. இதில் எண்ணிலண்டங்கா ஊழலும் நிகழ்ந்தமையால், கப்பலில் பாதுகாப்பு அம்சங்கள் சரிபார்க்கப்படாமல் கோட்டை விடப்பட்டது.

ஏப்ரல் 27 1865ல் எஸ் எஸ் சுல்தானாவில் 2,300 பேர் கூட்டிவரப்பட்டனர். இது அந்த கப்பலின் கொள்ளவை விட 6 மடங்கு அதிகம். தவிர பணம் கையாடல்கள் நடந்ததால் சுல்தானா கப்பலின் சேதமடைந்த பாயிலர்கள் சரிபார்க்கப்படாமலேயே பயணத்திற்கு தயாரானது. இந்த பாயிலர் நடுவழியில் வெடித்ததில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மற்றவர்கள் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். ஆனால், விபத்து ஏற்பட்ட அதே சமயத்தில் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லின்கன் படுகொலை செய்யப்பட்டதால் இந்த விபத்து மூடிமறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எஸ் எஸ் ஈஸ்ட்லேண்ட்:

எஸ் எஸ் சுல்தானாவை போலவே இதுவும் அமெரிக்க வரலாற்றில் நடந்த பெரும் கப்பல் விபத்துகளில் ஒன்று. ஜூலை 24 1915 ஆம் நாள், வெஸ்டர்ன் எலக்ட்ரிக் ஊழியர்களை சுற்றுலாவுக்கு கூட்டிச் சென்ற இந்த கப்பல் கரையை அடையும் சில தருணங்களுக்கு முன் மூழ்கியது. சுமார் 2,500 பேர் பயணித்த இந்த கப்பலில் 800 பேருக்கும் மேல் உயிரிழந்தனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?