world’s loneliest house Twitter
உலகம்

'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

பரந்து விரிந்த நீல கடலுக்கு நடுவே அமைந்துள்ள பச்சை நிற மலையின் மையத்தில் ஒரு புள்ளியாக காட்சியளிக்கிறது இந்த வீடு.

Priyadharshini R

உலகம் முழுவதும் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களை பற்றி ஆராய்ந்து பார்க்கையில் பல மர்மங்கள், அதிசயம் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன.

ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவ அடையாளம் கிடைக்கிறது.

அப்படி உலகின் தனிமையான வீடு குறித்தும் அதனை சுற்றி இருக்கும் மர்மங்கள், வதந்திகள், பின்னணியில் இருக்கும் உண்மைகள் குறித்தும் இங்கு காணலாம்.

iceland

ஐஸ்லாந்தின் தெற்கில் உள்ள ஒரு சிறிய தீவான எல்லியேவில் அமைந்துள்ளது இந்த வீடு.

பரந்து விரிந்த நீல கடலுக்கு நடுவே அமைந்துள்ள பச்சை நிற மலையின் மையத்தில் ஒரு புள்ளியாக காட்சியளிக்கிறது இந்த வீடு.

உலகின் தனிமையான வீடு என்று அழைக்கப்படும் இது முழு உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. முழு தீவில் இந்த ஒரு வீடு மட்டும் தான் தென்படுகிறது.

மாளிகையைச் சுற்றிய வதந்திகள்

தொலைதூர தீவில் அமைந்துள்ள இந்த வெள்ளை மாளிகை ஒரு விசித்திரமான கோடீஸ்வரரால் கட்டப்பட்டது என்றும்

ஜாம்பிக்களால் பேரழிவு ஏற்பட்டால், இந்த வீட்டை பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் பரவின.

இது மத துறவியின் சொத்து என்றெல்லாம் பல தகவல்கள் உலா வந்தன.

உண்மை என்ன?

இது 1950 ஆம் ஆண்டில் எல்லியே ஹண்டிங் அசோசியேஷனால் கட்டப்பட்டது.

இந்த வீடு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஒரு லாட்ஜ் என்று கூறப்படுகிறது. இந்த தீவில் இருந்து மக்கள் வெளியேறிவிட்டனர்.

இங்கு ஏராளமான மீன்கள் மற்றும் பஃபின்கள் (Puffins) இருப்பதாகவும் அதனால் அதனை வேட்டையாட பெரும்பாலும் வேட்டைக்காரர்கள் இங்கு வருகின்றனர் எனவும் தி சன் அறிக்கை கூறுகிறது.

வீட்டின் அம்சங்கள்

மரத்தாலான இந்த வெள்ளை நிற வீட்டை பார்க்கும்போது குளிர் தாங்குமா என்ற சந்தேகத்தை எழுப்பினாலும், வீட்டின் உள்ளே வேறுவிதமான தட்ப வெப்பநிலை உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த வீடு 10 பேர் தங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் வெளியே குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டும் இடமும் உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?