உலகிலேயே நீளமான 'மூங்கில் பாலம்’ எங்கே இருக்கிறது தெரியுமா? Twitter
உலகம்

உலகிலேயே நீளமான 'மூங்கில் பாலம்’ எங்கே இருக்கிறது தெரியுமா?

3000 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம்தான் உலகிலேயே மிக நீளமான மூங்கில் பாலம் என கருதப்படுகிறது. இந்த பாலத்தில் 50,000 மூங்கில் குச்சிகள் உள்ளன. மூங்கில் பாலத்தில் பயணம் செய்ய சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு 100 ரியல் (ரூ.2.02) வசூல் செய்யப்படுகிறது.

Priyadharshini R

இயற்கையின் படைப்புகள் அல்லது இயற்கையான பொருட்களை கொண்டு கட்டமைப்படுவதும் தனி சிறப்பை பெறுகின்றன. கடல், மற்றும் பெரிய நதிகளின் மீது நகரங்களை இணைக்கும் சில கட்டிடக்கலை அதிசயங்களையும் மனிதன் பல ஆண்டுகளாக உருவாக்கி வருகிறான்.

அந்த வகையில் கம்போடியாவில் உள்ள மூங்கில் பாலம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. 3000 அடி நீளம் கொண்ட இந்தப் பாலம்தான் உலகிலேயே மிக நீளமான மூங்கில் பாலம் என கருதப்படுகிறது. 1005 மீட்டர் நீளத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் 50,000 மூங்கில் குச்சிகள் உள்ளன. கம்போடியாவின் ஆறாவது பெரிய நகரமான கம்போங் சாம் நகரை மீகாங் ஆற்றின் குறுக்கே உள்ள 1,000 குடும்பங்களுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டது.

மீகாங் ஆற்றின் நீர் குறைந்து, படகு செல்ல முடியாத அளவுக்கு ஆழமற்றதாக மாறுவதால், கோடை காலத்தில் பாலம் கட்டப்படுகிறது.

மழைக்காலம் தொடங்கும் போது, மீகாங் ஆற்றில் நீர் பெருக்கம் வருவதற்கு முன், பாலம் கையால் அகற்றப்பட்டு, மூங்கில் சேமிக்கப்படுகிறது அல்லது வேறு கட்டுமானங்களுக்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

மழைக்காலத்தில் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்காக படகுகளை பயன்படுத்துவார்கள். ஆனால், கோடைகாலத்தில் தண்ணீர் வற்றி படகு செல்லுகின்ற அளவுக்கு நீர் இல்லாத சூழலில், மரப்பாலத்தை கட்டமைத்து அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கம்போங் சாமுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாலத்தை அனுபவிக்க வருகிறார்கள். மூங்கில் பாலத்தில் பயணம் செய்ய சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு 100 ரியல் (ரூ.2.02) வசூல் செய்யப்படுகிறது.

அதுவே சுற்றுலாப் பயணிகள் என்றால் 40 மடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டுமாம். பொதுவாக இந்த பாலத்தின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?