கடற்கரை பொதுவாக அனைவரும் விரும்பக்கூடிய இடம். தனிமை விரும்பிகள் தொடங்கி குடும்பத்தினர்கள் ஒன்றாக வரும் இடமாகவும் கடற்கரை இருக்கிறது.
வெள்ளை மணலை கால்விரல்களால் தீண்டி நீல நிற வானத்தின் கீழே கரை ஒதுங்கும் அலைகளை ரசிக்க சொல்லியா தர வேண்டும்?
உலகெங்கிலும் பல வகையான கடற்கரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான அழகிற்கு புகழ் பெற்றது.
அந்த பல வகைகளில் ஒன்று தான் இந்த நிர்வாண கடற்கரை. அது என்ன நிர்வாண கடற்கரை என்ன யோசிக்கிறீர்களா?
உலகெங்கிலும் உள்ள நிர்வாண கடற்கரைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
நிர்வாண கடற்கரை என்பது பார்வையாளர்கள் தங்கள் ஆடைகளின்றி உலா வர அனுமதிக்கும் கடற்கரையாகும்.
நிர்வாண கடற்கரைகள் ஆடை- விருப்பமான கடற்கரைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இங்கு வருபவர்கள் ஆண்- பெண் என பாகுபாடு இல்லாமல் சுதந்திரமாக இருக்கவும் இது அனுமதிக்கிறது.
பிளாக் பீச் எனப்படும் லா ஜொல்லா கடற்கரை கலிபோர்னியா சான் டியாகோ நகரத்திலிருந்து 30 நிமிடங்களுக்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ளது. உலகின் சிறந்த நிர்வாண கடற்கரைகளில் ஒன்றாக லா ஜொல்லா அறியப்படுகிறது.
பல ஆண்டுகளாக யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள ஒரே சட்டபூர்வமான நிர்வாண கடற்கரை இதுதான்.
காலங்கள் மாறியிருக்கலாம் ஆனால் இந்த பிளாக் பீச்சின் அழகு இன்னும் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பல கடற்கரைகளில் விருப்பமான ஆடை முறை இருந்தாலும், லேடி பே போன்ற பல அதிகாரப்பூர்வ நிர்வாண கடற்கரைகள் இங்கு உள்ளன.
இந்த கடற்கரையின் பாறை விளிம்புகள் நிர்வாண சன் பாத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.
கோடையில் சராசரி நீர் வெப்பநிலை 17°C (63°F) ஆக இருக்கும் இந்த கடற்கரை நிர்வாணமாக இருக்க அனுமதிக்கிறது.
ஜெர்மனி சில்ட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளும் ஆடைகளுக்கு விருப்பமானவை தான் என்றாலும் புஹ்னே 16 கரை நிர்வாண சன் பாத்துக்கு முதன்மையானது.
7.8 கிலோமீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீளமான நிர்வாண கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்த ரெக் பீச்
கனடா வான்கூவரில் அமைந்துள்ள ரெக் பீச் நிர்வாணத்தை அனுமதிக்கிறது.
கரையோரத்தில் இருக்கும் பசுமையான மரங்களும், நீர் முழுவதும் மூடிய பனி சிகரங்களும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
கிரீஸின் தெற்குப் பகுதியில் உள்ள இந்த கடற்கரையானது, நிர்வாண சன் பாத்துக்கு சிறந்த ஹாட்ஸ்பாட் எனலாம்.
இங்கு காணப்படும் காவி நிற மணல் மற்றும் பாறைகளின் பெயரால் ரெட் பீச் என்று அறியப்படுகிறது.
20 நிமிட நடைபயணம் அல்லது நீர்முனையிலிருந்து மிகக் குறுகிய படகு சவாரி மூலம் இந்த இடத்தை அடைய முடியும்.
லிட்டில் பீச், மௌய் என்பது பல பெயர்களைக் கொண்ட மற்றொரு கடற்கரை. லிட்டில் பீச், லிட்டில் மகேனா பீச் அல்லது ஓனௌலி பீச் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹேங்கவுட் செய்ய இது ஒரு சிறந்த இடம் என்றாலும் ஆடை விருப்பமான கடற்கரையாக இது கருதப்படுகிறது. இந்த கடற்கரை நிர்வாணத்தை அனுமதிக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu