6,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தங்கம் கண்டுபிடிப்பு - இதுதான் உலகிலேயே பழமையான தங்கமா? Twitter
உலகம்

6,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தங்கம் கண்டுபிடிப்பு - இதுதான் உலகிலேயே பழமையான தங்கமா?

Priyadharshini R

ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மூலம் கிரகத்தில் நமது வரலாற்றைப் பற்றி ஏதாவது ஒன்றை தெரிந்துகொள்கிறோம்.

அந்த வகையில் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிமு 4,500க்கு முந்தைய உலகின் மிகப் பழமையான தங்கத்தைக் கண்டுபிடித்தனர். பல்கேரியாவில் இந்த தங்கமணியை கண்டுபிடித்துள்ளனர்.

இது ஐரோப்பாவில், இல்லை இல்லை உலகிலேயே பழமையான பதப்படுத்தப்பட்ட தங்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தியின் படி,

வர்ணா தங்கம் 1972 மற்றும் 1991 க்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 5.8 கிலோகிராம் எடை கொண்டது.

பல்கேரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மணிகள் மேலும் 200 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளுகிறது.

அதனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மணிகள் முந்தைய பழமையான தங்கப் பொருளான வர்ணா தங்கத்திற்கு முந்தியவை.

பல்கேரிய அறிவியல் அகாடமியின் பேராசிரியரும், அகழ்வாராய்ச்சியின் பொறுப்பாளருமான Yavor Boyadzhiev கூறுகையில்

"இது வர்ணா தங்கத்தை விட பழமையானது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு. இது ஒரு சிறிய தங்கத் துண்டு, ஆனால் வரலாற்றில் அதன் இடத்தைக் கண்டுபிடிக்கும் அளவு பெரியது, " என்றார்.

அகழ்வாராய்ச்சியின் சரியான இடம் வர்ணாவை விட நவீன நகரமான பசார்ட்ஜிக்கிற்கு அருகில் உள்ள டெல் யுனாட்சைட் என்ற தளம் என்று தெரியவந்தது.

இது ஒரு அதிநவீன நகரமாகத் தோன்றியதால், ஐரோப்பாவின் முதல் நகர்ப்புறக் குடியேற்றமாக இது இருக்கலாம் என்று Boyadzhiev கூறினார். தங்கம் அந்த இடத்தில் தயாரிக்கப்பட்டு ஒருவித மத வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?