அள்ள அள்ள தங்கம் கிடைக்கும் உலகின் தனித்துவமான நதிகள் - எங்கே இருக்கிறது தெரியுமா?

சில நதிகளில் தங்கம் கிடைக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அப்படி உலகம் முழுவதும் தங்கம் உற்பத்தி செய்யும் நதிகள் குறித்து தான் இங்கே பார்க்கபோகிறோம்.
World's unique rivers which produce Gold
World's unique rivers which produce GoldTwitter

மனிதனுக்கு நதியுடன் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது. பழங்காலத்திலிருந்தே நதிக்கரையில் நாகரீகங்கள் பிறந்து, நதிகளால் மக்கள் வளர்க்கப்பட்டனர்.

நதிகளின் நீர் முக்கியமாக விவசாயப் பணிகளுக்கும், குடிப்பதற்கும், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

சில நதிகளில் தங்கம் கிடைக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

அப்படி உலகம் முழுவதும் தங்கம் உற்பத்தி செய்யும் நதிகள் குறித்து தான் இங்கே பார்க்கபோகிறோம்.

சுபர்ணரேகா நதி - ஜார்கண்ட்

ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் பாயும் சுபர்ணரேகா நதியின் நீரிலிருந்து தங்கம் பெறப்படுகிறது.

உள்ளூர் பழங்குடியினர் சுபர்ணரேகா ஆற்றின் மணலை வடிகட்டி தங்கத் துகள்களை சேகரிக்கின்றனர்.

ஒரு நபர் நாள் முழுவதும் இதனை சேகரித்தாலே ஒன்று அல்லது இரண்டு தங்கத் துகள்கள் தான் கிடைக்கும். மாதம் முழுவதும் 60 முதல் 80 தங்கத் துகள்களைப் பெறலாம். இந்த துகள்கள் அரிசி தானியங்களை விட சற்று பெரியதாக இருக்கும்.

மணலில் இருந்து தங்கம் எடுப்பவர்களுக்கு ஒரு துகளுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை கிடைக்கும். சந்தையில் ஒரு துகள் விலை சுமார் 300 ரூபாய் அல்லது அதற்கு மேல் போகும்.

இந்த தங்கத் துகள்களை விற்பதன் மூலம் ஒருவர் மாதம் 5 முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

World's unique rivers which produce Gold
Nile : உலகிலேயே நீளமான நதி பாதாள உலகின் வாசலா? - நைல் குறித்த ஆச்சரிய தகவல்கள்!

கரகாரி ஆறு - ஜார்கண்ட்

சுபர்ணரேகா நதியைப் போலவே, அதன் துணை நதியான "கரகாரி" ஆற்றின் மணலில் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன. சுபர்ணரேகா நதியில் உள்ள தங்கத் துகள்கள் கரகாரி ஆற்றின் வழியாகச் சென்றடைகின்றன என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. 37 கி.மீ. நீளமான கரகாரி ஆற்றிலும் தங்க துகள்களை மக்கள் சேகரித்து வருகின்றனர்.

World's unique rivers which produce Gold
அமேசான் : 6,400கி.மீ ஓடும் நதி; ஒரு பாலம் கூட கட்டப்படாதது ஏன்? - ஆச்சரிய உண்மைகள்!

க்ளோண்டிக் நதி - கனடா

கனடாவின் டாசன் நகரில் பாயும் க்ளோண்டிக் நதியிலிருந்தும் தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த ஆற்றின் அடிப்புறத்தில் தங்கம் விழுந்ததாக நம்பப்படுகிறது. 1896 ஆம் ஆண்டில், ஜார்ஜ் கார்மேக், டாசன் சார்லி மற்றும் ஜிம் மேசன் ஆகியோர் இந்த ஆற்றில் தங்கம் இருப்பதாக முதலில் தெரிவித்தனர்.

World's unique rivers which produce Gold
வறண்ட நதி, வெளியே தெரிந்த 3000 ஆண்டு பழமையான நகரம் - ஓர் ஆச்சர்ய வரலாறு

க்ளோண்டிக் ஆற்றில் இருந்து தங்கம் பெறும் முறை

முதலாவதாக, க்ளோண்டிக் ஆற்றின் காய்ந்த மணல், வாளிகளில் சேகரிக்கப்பட்டு பல முறை வடிகட்டப்படுகிறது.

அடுத்து ஆற்றின் நீர் சிறிய பாத்திரங்களில் வைக்கப்பட்டது, பின்னர் அது பனிக்கட்டி வடிவில் தேங்குகிறது. இறுதியில், அந்த கட்டியில் இருந்து தங்கத் துண்டுகள் பிரிக்கப்படுகின்றன.

இந்த தங்கத் துண்டுகள் பல வடிவங்களில் உள்ளன. சில துண்டுகள் முத்துக்களைப் போலவும், சில மெல்லிய தகடுகளை போலவும் இருக்கின்றன.

இந்த ஆற்றில் தங்கத்தை சேகரிக்க எந்த தடையும் இல்லை. இங்கு தங்கத்தை சேகரிக்க யார் வேண்டுமானாலும் அகழ்வாராய்ச்சி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com