என்னதான் நவீன வளர்ச்சியை நாம் கண்டு வந்தாலும் பழமைக்கென ஒரு மவுசும், மதிப்பும் உள்ளது.
உலகின் பழமையான கலைப்பொருட்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் பழமையான பறவை குறித்து? உலகின் மிகப் பழமையான காட்டுப் பறவை குறித்து வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விஸ்டம் என பெயர்க் கொண்ட இந்த பறவை மிட்வே அட்டோல் தேசிய வனவிலங்கு புகலிடத்திற்குத் திரும்பியுள்ளதாக அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை (USFWS) அறிவித்தது.
அல்பட்ரோஸ் இனத்தை சேர்ந்த விஸ்டம் பறவைக்கு குறைந்தது 71 வயது இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின் வடக்கு பசிபிக் தீவில் அமைந்துள்ள மிட்வே அட்டோல் தேசிய வனவிலங்கு புகலிடத்திற்கு மில்லியன் கணக்கான பறவைகள் தங்கள் துணையுடன் இனப்பெருக்கம் செய்ய இணைகின்றன.
அதிலும் குறிப்பாக அல்பட்ரோஸ் மற்ற பறவைகளை விட நீண்ட காலம் வாழ்வதாகவும், பெரும்பாலான இனங்கள் 50 வயதுக்கு மேல் வாழ்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்டம் என்ற பறவைதான் இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட காட்டுப் பறவைகளில் மிகவும் வயதானதாக கருதப்படுகிறது.
அல்பட்ரோஸ் அதன் இனப்பெருக்க காலத்தில் ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. இது சிவப்பு-பழுப்பு நிற புள்ளிகள் கொண்டதாக உள்ளது.
இவற்றின் முட்டைகள் 200 முதல் 510 கிராம் வரை எடை உள்ளது.
அனைத்து அல்பாட்ராஸ்களும் புல், புதர்கள், மண், கரி மற்றும் பென்குயின் இறகுகளைப் பயன்படுத்தி அவற்றின் முட்டைக்கு பெரிய கூடுகளை உருவாக்குகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust