World's saddest gorilla Twitter
உலகம்

உலகிலேயே சோகமான கொரில்லா இதுதான்! 32 ஆண்டுகளாக மாலில் சிறைப்பட்டிருக்கும் குரங்கு - ஏன்?

Priyadharshini R

தாய்லாந்தில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு மேலே உள்ள மிருகக்காட்சி சாலையில் கொரில்லா ஒன்று சிறைப்பட்டிருக்கிறது. புவா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கொரில்லா அதன் ஒரு வயதிலிருந்தே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறது.

தற்போது 32 வயதாகும் புவாவை, மீட்க பல தசாப்தங்களாக, தாய்லாந்தில் உள்ள விலங்கு ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.

அறிக்கைகளின்படி, முதலாளிகள் முதலில் புவாவை 7,00,000 பவுண்டுகளுக்கு விற்க ஒப்புக்கொண்டனர். ஆனால், அவர்கள் மனதை மாற்றிக் கொண்டனர்.

மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர் புவாவை $7,80,000 க்கும் குறைவாக விற்க மறுத்ததால் மீண்டும் புவா சிறையிலேயே இருக்க நேர்ந்துள்ளது.

‘லிட்டில் லோட்டஸ்’ என்று பொருள்படும் புவா 1990 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து தாய்லாந்தின் படா ஷாப்பிங் மாலுக்கு ஒரு வயதாக இருந்தபோது வந்தது.

2015 ஆம் ஆண்டு முதல், Pata ஷாப்பிங் மாலின் முதலாளிகள், தாய்லாந்து அரசாங்கத்தின் விலங்கு உரிமைகள் குழுவான PETA மற்றும் பாப் பாடகர் செர் ஆகியோரிடமிருந்து புவாவை விடுவிக்கும் வேண்டுகோளை மறுத்தனர்.

இந்த விலங்கு மற்ற கொரில்லாக்களுடன் ஜெர்மனியில் உள்ள சரணாலயத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர் தாய்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சாவிடம் புவாவை $782,000 அமெரிக்க டாலர்களுக்கு (30 மில்லியன் தாய் பாட்) விடுவிப்பதாகத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சரின் செயலாளர் தனபூன்யாவத் கூறுகையில், அமைச்சகம் நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர்களுக்கு செலுத்த போதுமான பணத்தை சேகரிக்க முடியவில்லை. மீட்க போராடி வருகிறோம் என்றார்.

ஆனால் பிரச்னை என்னவென்றால், புவாவை விற்க உரிமையாளர் மறுத்துவிட்டார்.

புவா தனிப்பட்ட சொத்தாக கருதப்படுவதால், அதை விடுவிக்க உரிமையாளர் மறுப்பதாக தனபூன்யாவத் விளக்கினார்.

PETA ஆசியாவின் மூத்த துணைத் தலைவர் ஜேசன் பேக்கர் கூறுகையில், புவாவின் வாழ்க்கை ஒரு 'திகிலூட்டும், கொடூரமான வாழ்க்கை ' என்றும் சரணாலயங்களுக்கு கொரில்லாவை அனுப்ப PETA உதவ அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?