நாம் விரும்பும் இடங்களுக்கு செல்ல பல வகையான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் விமானங்கள் மீது எல்லோருக்கும் அலாதி பிரியம் உண்டு. விமானத்தில் பயணிப்பது ஒரு வகையில், நாம் செல்லும் இடங்களுக்கு நம்மை குறுகிய நேரத்தில் கொண்டுசேர்த்து விடும் என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒரு சாத்தியக்கூறு.
உலகின் மிக சிறிய விமானப்பாதை இது தான். விமானத்தில் ஏறியதும் இறங்கிடுவது மாதிரியான இந்த பயணம் 1 நிமிடம் 14 விநாடிகளில் நிறைவடைந்துவிடுகிறது.
டிராவல் பிளாகர் ஆன நோயல் பிலிப்ஸ் என்பவர், இந்த விமானத்தில் பயணித்து தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார். இந்த விமானம் ஸ்காட்டிஷ் தீவுகளான பாபா வெஸ்ரேவை ஆர்க்னியில் உள்ள வெஸ்ட்ரேவுடன் இணைக்கிறது. இந்த இரண்டு இடங்களுக்கு மத்தியில் இருக்கும் தூரம் வெறும் 2.7 கிமீ தான்.
இவ்விமானம் பறக்கும் பாதையில் கிர்க்வால்லும் அடங்கும். இது ஒரு முக்கோண உருவாக்கத்தில் இயங்குகிறது.
இந்த விமானத்தில் பயணிக்க நாம் செலுத்தவேண்டிய கட்டணம் £ 17 (இந்திய மதிப்பில் ரூ. 1,643) இந்த 2.7 கிமீக்குக் கணக்கு பார்த்தால், இதுதான் மிகவும் விலையுயர்ந்த பயணமாக நமக்கு இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இயக்கப்படும் இவ்விமானத்தை லோகனைர் என்பவர் இயக்குகிறார்.
இந்த 2.7 கிமீ விமான பயணத்தை ஒரே ஒரு பாலம் அமைப்பதால் தவிர்த்துவிடலாம். ஆனால், உள்ளூர் அதிகாரிகள் இது குறித்தான எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அங்கு வசிக்கும் உள்ளூர் வாசிகளும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தும் ஒரே போக்குவரத்து இந்த விமான பயணம் தான் என்கின்றனர். ஒரு வேளை இந்த விமான போக்குவரத்தும் இல்லை என்றால், 20 நிமிட படகு சவாரி தான்.
இந்த விமானத்தில் பயணித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நோயல், "உலகின் குறுகிய விமானம்: 80 விநாடிகள் நீளம்!" என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்
பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. நெட்டிசன்களும் தங்கள் கமென்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர், "ஒருவேளை நீங்கள் இந்த விமானத்திற்காக காத்திருக்கும்போது, இது இரண்டு மணிநேரம் தாமதமானால் எப்படியிருக்கும்? நீங்கள் நடந்தோ அல்லது நீந்தி சென்றோ கூட சேரவேண்டிய இடத்திற்கு முன்னதாக சென்றடைந்து விடலாம்" என்றார்.
இது தான் தற்போது உலகின் மிக குறைவான நேரத்தில் மேற்கொள்ளப்படும் விமான பயணம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust