WWII era plane makes emergency landing in beach Twitter
உலகம்

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தபட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து- என்ன நடந்தது?| Video

Priyadharshini R

மகப்பேறு புகைப்படம் (Maternity Photoshoot) எடுக்கும் போது இரண்டாம் உலகப் போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கிறிஸ்டன் அதர்சன் தனது காதலன் மற்றும் தாயுடன் கோகோ கடற்கரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​விமானம் அவருக்குப் பின்னால் இருந்த கடலில் விழுந்தது. இந்த சம்பவம் 17 ஏப்ரல் 2021 அன்று நடந்தது.

இந்த விபத்து ஏற்பட்ட வீடியோ கிளிப் இணையத்தில் பகிரப்பட்டதை அடுத்து, தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த விமானம் TBM அவெஞ்சர் ஆகும். இது இரண்டாம் உலகப் போரின் அமெரிக்க டார்பிடோ குண்டுவீச்சு விமானம். ஆரம்பத்தில் அமெரிக்க கடற்படை மற்றும் கடல்சார் அதிகாரிகளுக்காக இது உருவாக்கப்பட்டது.

விமான கண்காட்சியின் ஒரு பகுதியாக கடற்கரையை கடந்து பறந்து கொண்டிருந்த போது அதன் இயந்திரம் செயலிழந்தது. அதன் பின்னர் விமானியின் கட்டுபாட்டை இழந்து விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து அந்த குடும்பத்தினர் கூறுகையில்,

”என் மகள் கிறிஸ்டன் கடற்கரையில் மகப்பேறு புகைப்படம் எடுக்க விரும்பினாள். நாங்கள் 10 நிமிடங்கள் அங்கே இருந்தோம். தண்ணீருக்குள் யாரும் இல்லாததால் எவரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அங்கு இருந்த மக்கள் அச்சமடைந்தனர்” என்றார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlus

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?