உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் சீனா அதிபர் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இனி அவர் உயிரவோடு இருக்கும் வரை, ஷி ஜின்பிங் தான் சீனாவின் அதிபராக பதவியில் இருப்பார் என அல் ஜெசீராவில் செய்தி வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 3,000 உறுப்பினர்களைக் கொண்ட சீன தேசிய மக்கள் காங்கிரஸ் முழுமையாக, ஷி ஜின்பிங்குக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் கூட அதிபர் ஷி ஜின்பிங் பதவி நீட்டிப்புக்கு எதிராக வாக்களிக்கவில்லை.
சீனாவில், சமீபத்தில் தான், ஒரு அதிபருக்கு இரு முறை மட்டுமே (இரண்டு ஐந்து ஆண்டுகளுக்கு) பதவியில் இருக்க வாய்ப்பளிக்கப்பட்டு வந்த சட்டத்தை திருத்தினர் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.
போட்டியிடும் மற்ற போட்டியாளர்கள் யார் என்கிற விவரங்கள் கூட நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் பல்வேறு செய்தி ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையும் ரகசியமாகவே நடந்ததாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் அதிபர் பதவியோடு, சீனா ராணுவத்தின் கமாண்டர் பதவிக்கும் ஷி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இனி சுமார் 20 லட்சம் சீன ராணுவ வீரர்களுக்குத் தளபதியும் அவரே.
கடந்த 2012 ஆம் ஆண்டு சீனா அதிபராக பதவிக்கு வந்த ஷி ஜின்பிங், தனக்கு எதிராக உருவான போட்டியாளர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளினார் அல்லது அரசியல் களத்தில் இருந்தே அவர்களை அப்புறப்படுத்தினார்.
மெல்ல கட்சிக்குள் தன் விசுவாசிகளைக் கொண்டு நிரப்பினார். சொல்லப்போனால், மாசே தூங்குக்குப் பிறகு, சீனாவின் மிக வலிமையான தலைவராக உருவெடுத்திருக்கிறார் ஷி ஜின்பிங்.
கடந்த அக்டோபர் 2022-ல், இதே ஷி ஜின்பிங் கட்சியின் பொதுச் செயலாளராகவும் வெற்றி பெற்றது இங்கு நினைவுகூறத்தக்கது. அடுத்த சில நாட்களுக்குள் ஷி ஜின்பிங்கால் தேர்வு செய்யப்பட்டவர்கள், கேபினேட் அமைச்சர்களாக பதவியேற்பர்.
ஷி ஜின்பிங்கின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் லி குவாங்க், சீனாவின் இரண்டாவது அதி உயர் பதவியாகக் கருதப்படும், பிரீமியராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
68 வயதான ஹன் செங் (Han Zheng) புதிய சீன துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 66 வயதான சாவ் லேஜி என்பவர் சீன நாடாளுமன்றத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த இருவருமே ஷி ஜின்பிங்கின் போலீட்பீரோ ஸ்டாண்டிங் கமிட்டியில் உறுப்பினராக இருந்தவர்கள் என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்பட்டதில் இருந்தே சீனா ஜீரோ கோவிட் வழிமுறையைப் பின்பற்றி வந்தது. இதனால் ஒட்டுமொத்த சீனப் பொருளாதாரமும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இப்போதும் சீனாவில் கொரோனா வைரஸ் கணிசமாகப் பரவி வருவது, அந்நாட்டு தலைவர்களுக்கு நீண்ட நெடிய சவாலாகவே தொடர்கிறது.
மறுபக்கம் அமெரிக்கா & சீனாவுக்கு இடையிலான உறவுமுறை நாளுக்கு நாள் தரை தட்டிக் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன், சீன பலூன் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது இங்கு நினைவுகூறத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust