யூசுஃப் ஷா: Albert Einstein, Stephen Hawking விட அதிக IQ கொண்ட 11 வயது சிறுவன் Twitter
Wow News

யூசுஃப் ஷா: Albert Einstein, Stephen Hawking விட அதிக IQ கொண்ட 11 வயது சிறுவன்- யார் இவர்?

Antony Ajay R

அறிவியல் வித்தகர்களான ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக அதிக ஐக்யூ கொண்டிருவராக நிரூபிக்கப்பட்டுள்ளார் யூசுன் ஷா என்ற 11 வயது சிறுவன்.

ஐக்யூவைக் கண்டுபிடிக்க நடத்தப்படும் Mensa test என்ற தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்ணாக 162 பெற்றுள்ளார் அந்த சிறுவன். இதுவரை அதிகபட்சமாக ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஐக்யூ மதிப்பு 160 என கணிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது ஆறாம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுவன் பள்ளியிலேயே ஸ்மார்ட்டான மாணவராக இருந்திருக்கிறார். இதனால் அவருக்கு ஐக்யூ சோதனைச் செய்யலாம் என பெற்றோர் நினைத்திருக்கின்றனர்.

இதனால் தனது உயர்கல்வி நுழைவுத் தேர்வுக்கும் மென்சா தேர்வுக்கு சேர்ந்தவாறு தயார் செய்து வந்திருக்கிறார் அந்த சிறுவன்.

"தேர்வுக்கு தயாராவது மிகவும் கடினமானது என்பதால் ஐக்யூ தேர்வுக்கு சிறப்பாக எந்த தயாரிப்பும் செய்துகொள்ளவில்லை" என அந்த சிறுவனின் தந்தை ஊடகங்களில் கூறியுள்ளார்.

மேலும், "நாம் அறிவில் எவ்வளவு சிறந்தவறாக இருந்தாலும், கடினமான உழைப்பாளியாக இருக்க வேண்டியது அவசியம்" என்று அவரது மகனிடம் அறிவுறுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

ஐக்யூ தேர்வின் போது 3 நிமிடத்தில் 15 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய இடத்தில் 13 நிமிடம் நேரமிருப்பதாக தவறாக எண்ணி நேரத்தை வீணடித்திருக்கிறார் யூசுஃப். ஆனாலும் இறுதியாக அதிகபட்ச எண்களை எட்டியுள்ளார்.

வருங்காலத்தில் கேம்பிரிட்ஜ் அல்லது ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்து கணிதவியல் படிக்கப்போவதாக அந்த சிறுவன் கூறியிருக்கிறார். இப்போது ஹை ஸ்கூல் நுழைவுத் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?