பாவோபாப்: தண்ணீரை சேர்த்து வைக்கும் ஆப்பிரிக்காவின் அதிசய மரங்கள் - தமிழகம் வந்தது எப்படி? Twitter
Wow News

பாவோபாப்: தண்ணீரை சேர்த்து வைக்கும் ஆப்பிரிக்காவின் அதிசய மரங்கள் - தமிழகம் வந்தது எப்படி?

இந்த மரத்தின் தண்டு மிக அகண்டதாக இருப்பதால் மக்கள் இதில் வீடு போல குடியிருக்கின்றனர். இது சேமித்து வைக்கும் தண்ணீரை வறட்சி காலத்தில் மக்களும் விலங்குகளும் பயன்படுத்துகின்றனர். வேற்றுகிரக தாவரம் போல தோற்றமளிக்கும் இது பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்

Antony Ajay R

பாவோபாப் மரங்கள் குறித்து பாடங்களில் படிக்கவில்லை என்றாலும் படங்களில் பார்த்திருப்போம். இந்த மரங்கள் ஆப்பிரிக்காவின் சிறப்பு என்றேக் கூறலாம். ஆப்பிரிக்காவிலேயே அதிக அளவில் காணப்படுகிறது. சில அரேபிய பிரதேசங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்த மரங்கள் இயற்கையாக வளர்ந்துள்ளன.

ஆனால் இப்போது உலகின் பல நாடுகளிலும் இந்த மரங்களைப் பார்க்கலாம். தமிழகத்திலும் இலங்கையின் வடக்கு பகுதியிலும் கூட பாவோபாப் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. ஆனால் எப்படி?

மிகவும் தடிமனான தண்டைக் கொண்டுள்ள இந்த மரம் 16 முதல் 98 அடி உயரம் வரை வளரும். இந்த மரம் மிகுந்திருக்கும் ஆப்பிரிக்க பகுதிகள் வேற்றுக்கிரகம் போலவே காட்சியளிக்கும்.

தமிழக்கத்தில் இந்த மரத்தை பெருக்க மரம், பப்பரப்புளிய மரம் என்று அழைக்கின்றனர். பொதுவாக வறண்ட பகுதிகளில் வளரும் இந்த மரங்களைக் காண நாம் ஆப்பிரிக்கா செல்லத் தேவையில்லை, ராஜபாளையத்திலேயே பார்க்க முடியும்.

இந்த மரங்களைப் பல வகைகளில் ஆப்பிரிக்க மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இதன் தண்டுப்பகுதியை குடைந்து தண்ணீர் தொட்டியாக பயன்படுத்துகின்றனர்.

இதன் விட்டம் 23 முதல் 26 அடி இருக்கும். இவ்வளவு பருமனாக இருப்பதனால் ஜிம்பாப்வேயில் மரத்தைக் குடைந்து 40 பேர் வசித்து வருகின்றனர்.

இந்த மரத்தில் உச்சியில் தான் கிளைகளே இருக்கும். இரவு நேரத்தில் வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இதன் பழத்தை மனிதர்கள் உட்கொள்ளலாம். காய், பழமாக 6 மாதக் காலம் எடுத்துக்கொள்ளும். 1.5 கிலோ அளவு பெரிய பழத்திற்குள் எக்கச்சக்க விதைகள் இருக்கும்.

இந்த மரம் சுத்தமான தண்ணீரை சேமித்து வைத்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் கிழைகளுக்கு இடையிலும் வெளிப்புற துளைகளிலும் நீர் இருக்குமாம். சுமார் 1 லட்சம் லிட்டர் வரை தண்ணீரை இந்த மரங்கள் சேமிக்குமாம்.

இந்த மரத்தின் பட்டைகள் கயிறு, மிதியடி, கூடை, காகிதம், துணி, இசைக்கருவிகள், தொப்பிகள் செய்யப்பயன்படுகின்றன.

இந்தியாவில் மத்தியபிரதேசம் மாநிலம் தர் (dhar) மாநிலத்தில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் இயற்கையாக இந்த மரங்கள் கிடையாது.

அரேபிய நாடுகளில் இருந்து வணிகம் செய்த இஸ்லாமியர்களால் இந்த மரங்கள் தமிழகத்திற்கு வந்தடைந்தன. சிவகங்கை, ராஜபாளையம் பகுதியில் காணப்படுகின்றன.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ கல்லூரியில் 200 ஆண்டுகள் பழமையான பாவோபாப் மரம் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?