Walter Arthman Twitter
Wow News

பிரேசில் : 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய நபர் - 100 வயதில் கின்னஸ் சாதனை

பிரேசிலில் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த 100 வயதை எட்டிய முதியவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Priyadharshini R

பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை மட்ட ஊழியராக வால்டர் ஆர்த்மன் என்பவர் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக முன்னேற்றம் விற்பனை மேலாளராகப் பதவி உயர்ந்தார்.

கடமையாற்றுவதில் கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்துள்ளார் வால்டர். அதாவது, 100 வயதை எட்டிய இவர் 84 ஆண்டுகளாக வேறு நிறுவனத்திற்கு மாறாமல், ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Walter Arthman

இந்த வயதிலும் கடமையுணர்வுடன் பணியாற்றி, கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்த வால்டரை தற்போது ஒட்டுமொத்த உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?