China Prime Minister  Twitter
Wow News

வணிக ரீதியான ரகசியங்களை அரசிடம் பகிர்ந்து கொண்ட நிறுவனங்கள் - என்ன காரணம்?

NewsSense Editorial Team

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சில வணிக ரகசியங்கள் இருக்கும். அப்படி ஐடி மற்றும் ஐடி சார் நிறுவனங்களுக்கு தங்கள் மென்பொருள் அல்லது வலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் அல்காரிதங்கள்தான் உயிர் நாடி.

அப்பேர்ப்பட்ட, தங்கள் வணிகத்தின் அடிநாதத்தையே சில சீன முன்னணி ஐடி சார் நிறுவனங்கள் சீன அரசிடம் பகிர்ந்துள்ளன. இப்படி தனியார் நிறுவனங்கள் தங்கள் அல்காரிதங்களை அரசிடம் பகிர்வது இதுவே முதல்முறை என பிபிசி ஊடகக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீனாவின் மிகப்பெரிய இ - காமர்ஸ் நிறுவனமான அலி பாபா, டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், டென்சென்ட் போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.

அமெரிக்காவில் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபபெட் போன்ற நிறுவனங்களிடம் மேலும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அல்காரிதங்களை அரசிடம் பகிர்ந்து கொள்வது தொடர்பாகக் கேட்ட போது, அவை அனைத்தும் வணிக ரகசியங்கள் என வெற்றிகரமாக வாதாடின.

சைபர் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் சீனா (சி ஏ சி) என்கிற அமைப்பு 30 நிறுவனங்களின் அல்காரிதங்களை சிறு விளக்கத்தோடு இணைத்து ஒரு பட்டியலாகப் பிரசுரித்துள்ளது. மேலும், தரவுகளை எவரும் தவறாகப் பயன்படுத்தி விடக் கூடாது என்கிற நோக்கில், இந்தப் பட்டியலைத் தொடர்ந்து அப்டேட் செய்வதாகவும் ஒரு செய்தியறிக்கையில் கூறியுள்ளது சி ஏ சி அமைப்பு.

உதாரணத்துக்கு, டாபோ (Taobao) என்பது அலிபாபாவின் அல்காரிதம் என்றும், இது ஒரு பயனரின் டிஜிட்டல் தடம் மற்றும் அவரது முந்தைய தேடுதல் விவரங்களை வைத்து பொருட்கள் அல்லது சேவைகளைப் பரிந்துரைக்கும் என விளக்கத்தோடு பட்டியலிட்டு உள்ளது.

TikTok

டிக்டாக் சமூகவலைத்தளத்தின் சீன வெர்சன் தான் டாயின் (Douyin). இதனுடைய அல்காரிதங்களைப் பயன்படுத்தி ஒரு பயனருக்கு என்ன பிடிக்கும், எதை சொடுக்குகிறார்கள், எதில் கமெண்ட் செய்கிறார்கள், எதற்கு லைக் போடுகிறார்கள் என்பதை எல்லாம் அளவிட முடியும்.

இது தொடர்பாக பைட் டான்ஸ், அலிபாபா, நெட் ஈஸ், பைடூ போன்ற எந்த சீன தொழில்நுட்ப நிறுவனங்களும் இதுவரை வாய் திறக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே சீன அரசு, டெக்னாலஜி சார் நிறுவனங்களைக் கடுமையாக நெறிமுறைப்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கையில் அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா கடுமையாகப் பாதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. கடந்த 2022 மார்ச் மாதத்தில் தான் சீனா புதிய அல்காரிதம் தொடர்பான சட்டங்களைக் கொண்டு வந்தது. அதன் படி, அல்காரிதங்களே ஒரு பயனருக்குப் பரிந்துரைக்கும் விஷயத்தை, அப்பயனரால் தவிர்த்துக் கொள்ள முடியும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?