Braden Wallake Twitter
Wow News

வேலையை விட்டு நீக்கும் போது அழுத CEO, ஊழியருக்கு குவிந்த வேலை வாய்ப்பு - என்ன நடந்தது?

Keerthanaa R

தான் வேலை நீக்கம் செய்த ஊழியர் ஒருவருக்கு, ஜாப் ஆஃபர்கள் குவிந்துள்ளதைக் கண்டு CEO ஒருவர் தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்

சமீபத்தில் ஐடி நிறுவன சிஇஓ ஒருவர் தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலரை வேலை நீக்கம் செய்துள்ளார். இதனால் வருத்தமடைந்துள்ளதாகக் கூறி LinkedIn தளத்தில் அழுதுகொண்டே பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

ஆனால் அந்த பதிவு இணையவாசிகளிடையே எதிர்மறை கருத்துக்களைத் தான் பெற்றிருந்தது. தற்போது அவர் வேலையிலிருந்து நீக்கிய நபர்களில் ஒருவருக்கு வேலை வாய்ப்புகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.

ஹைபர் சோஷியல் என்ற நிறுவனத்தின் சிஇஓ ப்ரேடன் வாலக். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலரை வேலையிலிருந்து நீக்கியுள்ளார். பின்னர், இந்த சம்பவம் தன் மனதை உடைத்ததாகவும், அதை நினைத்து கண்ணீர் சிந்தியதாகவும் கூறி LinkedIn தளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் மேலதிகாரிகள் எப்படி சில நேரங்களில் இதுபோன்ற நிர்ணயங்களை எடுக்கவேண்டியுள்ளது என்றும், அவர்களும் மனிதர்கள் தான் என்பது போன்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவு தன் மேல் மற்றவர்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொடுக்கும் என நினைத்திருப்பார்போல! ஆனால் எதிர்வினைகள் கெட்டதாக தான் வந்து சேர்ந்தது. வேலைநீக்கம் செய்த ஊழியர்களில் ஒருவரை இவர் வெளியேற்றியுள்ளார். இன்னொருவரை இவரது காதலியும், பங்குதாரருமான எமிலி சுக்டா என்ற பெண் நீக்கியுள்ளார். இது இணையவாசிகளை இன்னும் கோபமடையச் செய்தது. இந்த கண்ணீர் பொய்யானது, இவர் நம்மிடம் அனுதாபத்தை எதிர்பார்க்கிறார் போல என கமென்ட்ஸ் வந்தன.

தற்போது இவர் நீக்கிய பணியாளர்களில் ஒருவரான நோவா ஸ்மித் என்ற நபருக்கு பல கம்பனிகளிலிருந்து வேலை வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளது. அவருக்கு வந்த வேலைக்கான அழைப்புகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து நோவா தனக்கு பகிர்ந்திருந்ததாக வாலக் கூறினார். மேலும், இதற்கு முன்பு அவர் பதிவை பார்த்து தன்னை கேலிக்கு உள்ளாக்கிய ஒவ்வொரு கமென்ட்டுக்கும் நன்றி, அவை அனைத்தும் மதிப்பிற்குரியது என தெரிவித்திருந்தார்.

"வைரலாகவேண்டும் என்பது நோக்கமாக இல்லை. ஆனால் உங்களால் இன்று நோவாவிற்கு அவரது தகுதிக்கு ஏற்ப நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அவர் எந்த நிறுவனத்திற்கு செல்கிறாரோ, அந்நிறுவனம் நிஜமாகவே லக்கி" எனவும் கூறியிருந்தார்.

மேலும், அழுதுகொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததற்கான காரணத்தையும் வால்க் கூறியிருந்தார். "நான் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததற்கு என்ன காரணம்? அனுதாபமா? நான் இரக்கமற்றவனா? அல்லது வைரலாகும் என்று எனக்கு முன்னமே தெரியுமா?

இல்லை!

அவர்களைப் பணி நீக்கம் செய்த பின்னர் எனது அறையில் உட்கார்ந்துகொண்டு வாழ்க்கையை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். வாழ்க்கை எல்லோருக்கும் எவ்வளவு கடினமானதாக இருக்கிறது, முக்கியமாகக் கடந்த இரண்டு வருடங்களாக... அதை பற்றி பதிவிடலாம் என எண்ணி தான் அந்த பதிவை பகிர்ந்தேன்" என்றார்.

நோவாவிற்கு வேலைவாய்ப்புகள் குவியவே, தற்போது எங்களையும் வேலையை விட்டு நீக்குங்கள் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?