GIETHOORN Twitter
Wow News

சாலைகளே இல்லாத ஓர் அடடே கிராமம் - இங்கு படகு சவாரி மட்டுமே

Antony Ajay R

வித்தியாசமான ஊர்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். உலகில் இருக்கும் ஒவ்வொரு நிலப்பரப்பும் தனக்கென தனித்த அடையாளத்தைக் கொண்டிருக்கும். அப்படித் தனித்துவம் பெற்ற ஒரு கிராமத்தைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

இந்த கிராமத்தில் சாலைகளே கிடையாது. கார், பஸ், ஆட்டோ எதுவுமே கிடையாது. இங்கு தெருக்கள் தண்ணீர் மூலமாகவே பிரிக்கப்படுகின்றன. கீத்தோரன் (GIETHOORN) என்பது தான் அந்த ஊரின் பெயர். இது நெதர்லாந்தில் இருக்கிறது.

கால்வாய்கள் மட்டுமே இருக்கும் இந்த கிராமத்தில் படகு சவாரி மட்டுமே பயணம் செய்வதற்கான ஒரே வழி. ஒரு வித்தியாசமான மற்றும் சுகமான வாழ்வை அனுபவிக்கின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.

பச்சைப் பசேலென இயற்கையழகில் ஜொலிக்கும் அந்த அந்த ஊரின் கால்வாய்கள் வழியாக அவர்கள் பயம்படுத்தும் சிறிய படகில் ஒரு முறை பயணம் செய்வதே மறக்க முடியாத அனுபவமாக மாறிவிடும் என்கிறார் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள்.

மிக அமைதியான அந்த ஊரின் சலனமற்ற கால்வாயில் குவாக் குவாக் சத்தத்துடன் வாத்துகள் நமக்கு துணையாக உடன் வரும்.

உலகம் முழுவதும் இருந்து தண்ணீரின் மீது காதல் கொண்டிருக்கும் பயணிகளை தன்வசம் ஈர்த்துக்கொள்கிறது இந்த ஊர்.

சாலைகள் இல்லாததால் மிகவும் சீரற்ற ஊராக இதனைக் கருதுபவர்களும் உண்டு ஆனால் அவர்கள், இங்கிருக்கும் ஏரிகளை, பூக்களை, மரப்பாலங்களை ரசிக்க மறந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

கால்வாய்களுக்கு இடையிடையாக 180 மரப்பாலங்கள் இந்த கிராமத்தில் உள்ளன. அவற்றின் வழியாக மக்கள் நடந்தும் சைக்கிளிலும் செல்கின்றனர்.

ஊரின் பசுமையையையும் மாசற்ற தன்மையையும் பாதுகாப்பதற்காக அங்கிருக்கும் மக்கள் மற்ற வாகனங்களை அனுமதிப்பதில்லை. சுற்றுலா வருபவர்கள் கூட அவர்களின் வாகனங்களை ஊருக்கு வெளியில் நிறுத்திவிட்டு தான் வரவேண்டுமாம்.

நெதர்லாந்தின் வீர்ரிபென்-வீடன் வனவிலங்கு சரணாலயத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது அந்த ஊர். இதனால் இயற்கையாகவே வனத்துக்கு அருகில் இருக்கும் உணர்வையும் கொடுத்துவிடும்.

இந்த ஊர் முதன் முதலாக 13ம் நூற்றாண்டில் தான் உருவானது. பிரான்ஸிஸ்கன் துறவிகள் இங்கு குடியேறினர். அவர்கள் தான் கரி எடுத்துச் எடுத்துச் செல்வதற்காக கால்வாய்களைத் தோண்டினர்.

1958ம் ஆண்டு முதல் தான் இந்த கிராமம் உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது. அதுவும் ஃபேன்ஃபேர் (Fanfare) என்ற டச்சு திரைப்படத்தில் இதனை காண்பித்த பின்னர் தான்.

அதன் பிறகு ‘Little Venice’ என்று அழைக்கப்பட்டது. Venice என்பது சிறிய தீவுக்கூட்டங்களை சேர்த்து உருவாக்கப்பட்ட இத்தாலிய நகரமாகும்.

மொத்தமாக லிட்டில் வெனிஸில் 3000 குடும்பங்கள் வசிக்கின்றன. எனினும் இந்த கிராமம் அமைதியானதாகவே இருக்கிறது. இங்கிருக்கும் பெரும்பாலான வீடுகள் தனியான தீவில் இருக்கின்றன.

மரவீடுகளே அதிகம். கூரை வேயப்பட்டவை அல்லது ஓட்டு வீடுகள். சில கட்டடங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் பசுமையானப் பூத்துக்குளுங்கும் தோட்டமும் இருக்கிறது. ஒரு முறை இந்த கிராமத்தை விசிட் அடிப்பவர்கள் இங்க ஒரு வீடு என்ன விலை எனக் கேட்காமல் திருப்புவதில்லை.

இந்த உள்ளூர் வாசிகளால் மூன்று விதமான படகுகள் பயன்படுத்தப்படுகிறது.

canoe

இரண்டு பேர் செல்லக் கூடிய தட்டையான படகு. இது மரத்துடுப்பைக் கொண்டு இயக்கப்படுகிறது.

Kayak

ஒன்று அல்லது இரண்டு பேர் பயன்படுத்தக்கூடிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் படகு. பிளாஸ்டிக் துடுப்பைப் பயன்படுத்தி இயக்கப்படும்.

whisper boat

பெட்ரோல் பயன்படுத்தி இயக்கப்படக் கூடிய மோட்டார் போட். இது சத்தம் எழுப்பாது என்பதால் இதனை பயன்படுத்துகின்றனர்.

சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஐரோப்பிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இங்கு வரும் பயணிகள் படகுசவாரியுடன் அழகான பாலங்களின் மீது சைக்கிளிங் செல்வதையும் அதிகம் விரும்புகின்றனர்.

இங்கிருக்கும் கஃபேக்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கும். அழகிய, சிறிய, வித்தியாசமான உணவகங்களை இங்குக் காணலாம்.

நகரத்தின் இரைச்சல் மிகுந்த பாஸ்ட் புட் வாழ்விலிருந்து விடுபட்டு இங்கு வருபவர்களை பறவைகளின் இனிய பாடல்கள் மட்டுமே தொந்தரவு செய்கிறது. கனவில் இருப்பது போன்ற உணர்வைப் பெறாமல் இங்கிருந்து வெளியேற முடியாது.

கால்வாய்களையும் பாலங்களையும் கடந்து இங்கு பல வரலாற்று கட்டிடங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள் மற்றும் மியூசியங்களைக் காணலாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விலங்குப் பண்ணைகள் எப்படியிருக்குமோ அதே வடிவில் இங்குக்காண முடியும்.

இயற்கையோடு இணைந்து இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள் அருகிலிருக்கும் தேசிய பூங்காவான டி வீர்ரிபென்-வைடன் பூங்காவுக்கு சென்று வரலாம்.

தோன்றி மறையும் சாலைகள்

சில சுற்றுலாத்தளங்கள் வெயில் காலத்துக்கும் சில பனிக்காலத்துக்கும் ஏற்றதாக இருக்கும். ஆனால் GIETHOORN எல்லா காலங்களிலும் நம்மை வியக்க வைக்கும் அழகுடன் இருக்கும்.

பனிக்காலத்தில் இங்கிருக்கும் ஓடைகளும் கால்வாய்களும் உறைந்து பனிச் சாலைப் போல மாறிவிடும்.

பனியில் ஸ்கேட் செய்பவர்கள், பனிச்சறுக்கில் ஈடுபாடுகொண்டவர்களுக்கு இது புது வித அனுபவத்தைத் தரக் கூடியது.

அருகில் உள்ள ஏரிகளிலும் விசாலமாக பனிச்சறுக்கு செய்யலாம். பல விசித்திர இடங்களைக் குறித்து கேள்விப்படும் நமக்கு சில இடங்களுக்குத் தான் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இன்னும் சில இடங்களில் தான் அங்கேயே வாழ்ந்து விடலாம் எனத் தோன்றும். அந்த வகையில் உங்கள் மனதுக்கும் நெருக்கமானதாக இருக்கிறது தானே நெதர்லாந்தின் GIETHOORN.

ஏமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?