லின்னியா சால்வோ  Twitter
Wow News

72 வயதில் 3300 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த மூதாட்டி - என்ன சொல்கிறார்?

Antony Ajay R

30 வயதைக் கடப்பதற்குள் சாதாரண தினசரி வேலைகளைச் செய்வதற்குக் கூட நாம் மிகவும் களைப்படைவதாகவும், வயதாகிவிட்டதைப் போலவும் உணரும் வேளைய் 72 வயது மூதாட்டி ஒருவர் மொத்த அமெரிக்காவையும் கடந்து சாதனைப் படைத்திருக்கிறார்.

லின்னியா சால்வோ என்ற அந்த மூதாட்டி படைத்துள்ள கின்னஸ் சாதனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 3,352 கிலோ மீட்டர் பயணத்தின் மூலம் அமெரிக்காவை வடக்கு - தெற்காக சைக்கிளில் கடந்த ஒரே நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அமைதிக்கான சின்னத்தை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு சாலையில் உருவாக்கும் சாதனை ஒன்றையும் லின்னியா சால்வோ என்ற அந்த மூதாட்டி படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"என்னுடைய சாதனைகள் வேகம் சார்ந்ததாக இல்லாமல், வயது சார்ந்து இருப்பதனால் நான் நிதானமாக இலக்கை நோக்கிச் செல்ல முடிகிறது. மற்ற சைக்கிளிஸ்ட்களைப் போல நான் சோர்வடைவதில்லை" என்கிறார் அந்த மூதாட்டி!

இவர் 67 வயதாக இருக்கும் போது அமெரிக்காவை கிழக்கு மேற்காக கடந்த வயதான நபர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

68 வயதில் கனடாவை கடந்து வந்த வயதான பெண் என்ற சாதனையையும் படைத்தார் அவர். அதிக தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இல்லை.

"என் மகன் 10 வயதாக இருக்கும் போது ஒரு பதின்பருவ பையன் அமெரிக்காவை கடந்து சைக்கிள் ஓட்டி சாதனைப் படைத்ததாக ஒரு செய்தி வந்தது. என் மகனுக்காக அதனை வெட்டி சுவரில் ஒட்டி வைத்தேன். இப்போது நான் அதனைச் செய்துகொண்டிருக்கிறேன்" என அவர் கூறியிருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?