15,800 ரூபாய் மதிப்புடைய french fries Twitter
Wow News

ஒரு பிளேட் french fries விலை 15,800 ரூபாய் - ஏன் தெரியுமா?

Antony Ajay R

பெரும்பாலான நபர்கள் தினசரி ஒரே உணவையே உண்டு சலித்துப் போயிருக்கின்றனர். இதனால் உணவகங்கள் புதிய புதிய உணவுகளை அறிமுகப்படுத்தி அதிக லாபம் பார்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.

அப்படி வித்தியாசமான மற்றும் காட்ஸ்லியான உணவு இப்போது சாதனைப்படைத்திருக்கிறது. அதுதான் ‘Crème dela Crème Pommes Frites’ என்று அழைக்கப்படும் ஒருவகை ஃப்ரென்ச் ஃப்ரைஸ்.

இது ஒரு ப்ளேட் 200 டாலராம் அதாவது 15,800 ரூபாய். அப்படி என்ன சிறப்பு இதில்?

நியூயார்க்கில் இருக்கும் Serendipity 3 என்ற உணவகம் தான் அந்த உருளைக் கிழங்கு ஃப்ரைஸை தயாரித்திருக்கிறது. அந்த ஃப்ரைஸ் உலகிலேயே காட்ஸ்லியானது என கின்னஸ் சாதனைகளால் அங்கீகாரம் பெற்றிருக்கிறது!

உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட இனிப்பாக Frrrozen Haute Chocolate ice cream sundae திகழ்கிறது. காரணம் இதில் 23 கேரட் தங்கத் துகள்கள் போடப்பட்டிருக்கும்.

இதே தங்கத் தூள்கள் தான் இந்த சிப்ஸையும் காட்ஸ்லியானதாக மாற்றியிருக்கிறது. இது உண்ணக் கூடியதும் கூட.

எனினும் சிப்ஸ் அதன் விலைக்கு ஓரளவு ஈடுகட்டும் ருசியில் இருக்க வேண்டும் என்பதற்காக உலகின் பல நாடுகளிலிருந்து உயர்தர பொருட்கள் கொண்டுவரப்பட்டு இதைத் தயாரித்துள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?