Italian Kiss twitter
Wow News

முத்தத்தில் கின்னஸ் சாதனை : Italian Kiss என்றால் என்ன தெரியுமா?

Antony Ajay R

இதுவரை மொத்தமாக நாற்பதாயிரத்துக்கும் மேலான கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதில் பல விசித்திரமானதாகவும் வித்தியாசமானதாகவும் உள்ளது. அப்படி ஒரு சாதனை தான் தற்போது பெல்ஜியத்தில் படைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் முத்தம் சம்பந்தமான சாதனையாம்.

மனிதர்கள் எப்போதிலிருந்து முத்தமிடத் தொடங்கியிருப்பார்கள் எனத் தெரியுமா? எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அன்பின் வெளிப்பாடான முத்தம் பரிணமித்து சாதனைப் படைக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.

433 ஜோடிகள் ஒன்றாக அமர்ந்து ஸ்பெகட்டி என்ற நூடூல்ஸின் ஒரு இழையை மட்டும் உண்பது தான் அந்த சாதானை. அந்த நூடூல்ஸ் இழையை இரு பக்கத்திலிருந்தும் இருவரும் சாப்பிட நடுவில் அவர்களது உதடுகள் உரசிக்கொள்ளும். இது 'இத்தாலிய முத்தம்' எனப்படுகிறது. ஏதோ ஹாலிவுட் படத்தில் பார்த்த நினைவு ஏற்படுகிறது.

பெல்ஜியத்தில் உள்ள ஃப்லாண்டர்ஸ் எக்ஸ்போ எனுமிடத்தில் குடியிறுப்பு சங்கம் தான் இந்த சாதனையை செய்ய முன்வந்தது. அட இதெல்லாம் ஒரு சாதனையா என நினைக்க வேண்டாம்.

ஸ்பெகட்டி நூடூல்ஸ் மிக மென்மையானது. அதனை உடையாமல் இருவரும் ஒரு ஒரு பக்கத்தில் இருந்து சாப்பிடுவது ஆகாத காரியம் என்றே சொல்லலாம்.

ஆழமான புரிதல் உள்ள ஜோடிகளால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பது அவர்களின் புரிதல்.

இத்தனைக்கும் இதனை 30 வினாடிகளுக்குள் செய்ய வேண்டியது அவசியம்.

இதற்கு முன்னதாக 125 ஜோடிகள் இது போல பாரிஸில் செய்திருந்தனர். அவர்களின் சாதனையை தான் தற்போது முறியடித்திருக்கிறது இந்த குடியிறுப்பு சங்கம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?