அலன்சோ கோல்மேன் Twitter
Wow News

கனவில் தோன்றிய லாட்டரி எண்- 1.9 கோடி வென்ற நபர் !

Antony Ajay R

கனவுகள் நமது தினசரியை, கடந்த காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். சில நேரங்களில் கனவுகள் எதிர்காலத்தை சொல்லும் என மக்கள் நம்புகின்றனர். ஐன்ஸ்டைனின் Theory of Relativity முதல் Periodic Table Of The Elements வரை கனவில் வந்த ஐடியாக்கள் பல உலகையே மாற்றியிருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வாழ்வையே மாற்றியமைப்பதாக இருந்திருக்கிறது அவரது கனவு.

வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த அலன்சோ கோல்மேன் என்பவர் தனது கனவில் வந்த எண்களைப் பயன்படுத்தி $250,000 தொகையை லாட்டரி பரிசாக வென்றிருக்கிறார். இதன் இந்திய மதிப்பு ₹1.9 கோடி!

Bank A Million என்ற லாட்டரி கம்பனியில் வென்ற அவர், லாட்டரி அதிகாரிகளிடம் தனது கனவில் வந்த எண்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதாகக் கூறினார்.

அத்துடன் மகிழ்ச்சியிலிருந்த அவர். "இது நம்ப முடியாததாக இருக்கிறது" எனக் கூறினார்.

இந்த லாட்டரியில் முதல் பரிசான 1 மில்லியன் டாலர் பரிசை 3 மில்லியனில் ஒருவர் தான் வெல்ல முடியும் எனவும் சாதாரணமாக 18.3-ல் ஒருவர் பரிசை வெல்லலாம் எனவும் வர்ஜீனியா லாட்டரி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தனக்கு ₹1.5 லட்சம் லாட்டரி கிடைத்துள்ளது என நினைத்த லாரி டிரைவர் ஒருவருக்கு ₹7.9 கோடி ஜாக்பாட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?