மிடாஸ் Instagram
Wow News

இணையத்தை கலக்கும் நான்கு காது பூனை - எங்கு இருக்கிறது? | வைரல் வீடியோ

Antony Ajay R

நான்கு காதுகளுடன் பிறந்துள்ள ஒரு பூனை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மிடாஸ் என்பது தான் அதன் பெயர். மரபணு மாற்றம் காரணமாக கூடுதலாக இரண்டு காதுகளை கொண்ட இந்த பூனை இன்ஸ்டாகிராமில் பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

உங்கள் இன்ஸ்டாகிராமில் அதிகமாக செல்லபிராணிகள் குறித்த வீடியோக்களைப் பார்ப்பவரா நீங்கள்? எனில் "Weekly Fluff" குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஹேஷ்டேகில் உலகம் முழுவதும் இருந்து செல்லப்பிராணிகளின் க்யூட்டான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. அதில் ட்ரெண்டானது தான் நம்ம மிடாஸ்.

இது ரஷ்ய நீல வகையைச் சேர்ந்த பூனை. தற்போது துருக்கியில் வசித்து வருகிறது. இதனை நண்பர் ஒருவரின் வீட்டுப் பின் புறத்தில் கண்டெடுத்த இதன் உரிமையாளர் கேனிஸ், " தனித்துவமான மரபணு மாற்றத்தால் மிடாஸ் நான்கு காதுகளைக் கொண்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

மிடாஸின் வீடியோவை வெளியிட்டவர், "அவள் தனது புதிய வீட்டில் அழகான வாழ்வை வாழ்வதில் பிசியாக இருக்கிறாள்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கேனிஸ், "அவள் விளையாட்டுத் தனமானவள், ஆனால் அன்பானவள். இரவு முழுவதும் விழித்திருந்தே நேரத்தை கழிக்கிறாள்" எனவும் முன்னர் கூறியிருந்தார்.

மிடாஸின் கேட்கும் திறனில் எந்த குறியுமில்லை என்கிறார் கேனிஸ். அவர் மிடாஸை நண்பரின் தோட்டத்தில் கண்டெடுக்கும் போது அவளது தாய்க்கு 6 குழந்தைகள் பிறந்திருந்தனராம். ஆனால் கேனிஸ் 4 காதுகள் கொண்ட மிடாஸை தன்னுடன் அழைத்துக் கொண்டிருக்கிறார்.

4 காதுகள் மட்டுமில்லாமல் மிடாஸின் அடையாளமாக வயிற்றில் வெள்ளை நிற ஹார்ட் ஷேப் ஒன்றும் இருக்கிறதாம்.

Cat

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?