Red Cross Diamond Twitter
Wow News

உலகின் காஸ்ட்லி வைரம் இதுதான் : அதன் சிறப்பு என்ன தெரியுமா?

இந்த பெரிய வைரக் கல், தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த 2000ஆம் ஆண்டு வாக்கில் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வைரக் கல் துபாய், தைபே, நியூயார்க் போன்ற நகரங்களில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

Gautham

ஜெனீவா நகரத்தில் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில், மிகப் பெரிய வெள்ளை வைரக் கல் ஒன்று, 18.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போய் உள்ளது.

இந்த பெரிய வைரக் கல், தென்னாப்பிரிக்காவில் இருந்து கடந்த 2000ஆம் ஆண்டு வாக்கில் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த வைரக் கல் துபாய், தைபே, நியூயார்க் போன்ற நகரங்களில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

'தி ராக்' என்று அழைக்கப்படும் இந்த வைரக் கல் 228.31 கேரட் கொண்டது. அதன் அளவைக் குறிப்பிட வேண்டுமானால், ஒரு கோல்ஃப் பந்தை விடப் பெரிய, பேரிக்காய் வடிவத்திலான வைரமிது என்கிறார் கிறிஸ்டி ஏல நிறுவனத்தின் நகைப் பிரிவுத் தலைவர் மேக்ஸ் ஃபாசெட்.

Red Cross Diamond

ரெட் கிராஸ் வைரம்

தி ராக் வைரத்தோடு, மஞ்சள் பூசியது போலிருக்கும் ரெட் கிராஸ் என்கிற வைரமும் ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த மஞ்சள் வைரத்தின் விற்பனை வழி கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி செஞ்சிலுவைச் சங்கத்துக்குச் செல்லும்.

பார்க்க கனசதுர வடிவத்தில் இருக்கும் ரெட் கிராஸ் வைரம், 205 கேரட் கொண்டது. இது 7 - 10.13 மில்லியன் வரை விலை போகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தை விற்று கிடைக்கும் பணத்தில் ஒரு கணிசமான பகுதி, ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச கமிட்டிக்கு சென்று சேரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரெட் கிராஸ் வைரத்தில், ஒரு சிலுவை போன்ற குறி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக இருந்து வருகிறது.

Red Cross Diamond

லண்டனில் கிறிஸ்டீஸ்

சுமார் 41.1 கிராம் எடையோடு, 33.83 x 33.80 x 24.91 மில்லி மீட்டர் நீள, அகல, உயரத்தில் இருக்கும் இந்த வைரத்தை, கடந்த 1918ஆம் ஆண்டு லண்டன் நகரத்தில் கிறிஸ்டீஸ் நிறுவனம் ஏலத்தில் விட்டது. லண்டனைச் சேர்ந்த எஸ் ஜே ஃபிலிப்ஸ் நகைக்கடை இன்றைய மதிப்புக்கு சுமார் 7.4 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்த 1973 நவம்பர் காலத்தில் கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் 1.8 மில்லியன் சுவிஸ் ஃபிரான்க் தொகைக்கு ஏலம் நடத்தி விற்றுக்கொடுத்தது.

தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ரெட் கிராஸ் வைரத்தை ஏலத்தில் விட இருக்கிறது கிறிஸ்டீஸ் நிறுவனம்.

Ruby ring

ரூபி ரிங்

கடந்த 2017ஆம் ஆண்டு, 163 கேரட் கொண்ட வெள்ளை வைரம் சுவிஸ் நகரத்தில் அதிகபட்சமாக 33.7 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

தற்போது சோபர்ட் என்கிற சுவிஸ் நிறுவனத்தின் 80.08 கேரட் கொண்ட வைரம் மற்றும் மாணிக்க மோதிரம் முறையே சுமார் 8 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் மாணிக்க மோதிரம் 7.5 - 9.6 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஏலம் போகலாம் என சோத்பை (Sotheby's) என்கிற ஏல நிறுவனம் கணித்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?