Joke Twitter
Wow News

உலகின் சிறந்த ஜோக் எது தெரியுமா? அறிவியல் சொல்வது என்ன?

அறிவியல் பூர்வமாக ஒரு நல்ல ஜோக் தன்னுள் 3 காரணிகளைக் கொண்டிருக்க வேண்டும் என வரையறுத்து வைத்திருக்கும் உளவியல் நிபுணர்கள் அந்த 3 காரணிகளும் இந்த ஜோக்கில் இருப்பதாகக் கூறினர்.

Antony Ajay R

வீடுகளில் தொலைக்காட்சி பார்க்கும் போது ஏகப்பட்ட சண்டைகள், கூச்சல் குழப்பங்கள் ஏற்படும். பட்டிமன்றம் பார்க்க வேண்டும் என அப்பா, பாடல் கேட்க வேண்டும் என அண்ணன், சீரியல் பார்க்க வேண்டுமென அம்மா, படம் பார்க்க தங்கை, கார்டூன் பாக்க தம்பி என விடுமுறை நாளானால் அடித்துக்கொள்ளாத குறைதான். இந்த எல்லாரையும் ஒருங்கிணைத்து மகிழ்ச்சியாக டிவி முன் உட்காரவைப்பது நகைச்சுவை தான்.

நாகேஷ் தொடங்கி யோகி பாபு வரை பல நடிகர்களின் நகைச்சுவையை நாம் ரசித்திருக்கிறோம். ஆனால் இவர்களில் யார் சிறந்த நகைச்சுவை நடிகர் எனக் கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்லுவோம்.

எல்லாருக்கும் பிடித்த அல்லது எல்லாரையும் சிரிக்க வைக்கக் கூடிய நகைச்சுவையாளர்கள் இருக்கின்றனரா எனத் தெரியவில்லை. ஆனால் இது தான் உலகில் சிறந்த நகைச்சுவை என அறிவியலின் துணைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒன்றைக் கூறுகின்றனர்.

அந்த சிறந்த ஜோக் எது? எதற்காக அது சிறந்த ஜோக் எனக் காணலாம்.

உளவியல் மருத்துவர்கள் இணைந்து மேற்கொண்டது தான் இந்த ஆய்வு. இதில் டாக்டர் ரிச்சர்ட் வைஸ்மேன் எனும் உளவியல் நிபுணர் ஜோக்குகளை ஆராய குழுவை அமைத்தார்.

2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 40000க்கும் மேலான ஜோக்குகள் இடம்பெற்றன.

மான்செஸ்டரைச் சேர்ந்த மனநல மருத்துவர் குர்பால் கோசல் அனுப்பிய ஜோக் தான் சிறந்த ஜோக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

"என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போடா முடியாது."

இது அல்ல சிறந்த ஜோக்.

இரண்டு திருடர்கள் வேட்டைக்குச் சென்றனர். அதில் ஒருவன் திடீரென மயங்கி விழுந்துவிட்டான். அவனிடம் மூச்சு இல்லை, கண்கள் மேலே சொருகி விட்டன. மற்றொருவன் அச்சத்தில் ஆம்புலன்ஸுக்கு கால் செய்தான். வேட்டைக்காரன்: சார் என் ஃப்ரெண்ட் திடீர்னு செத்துட்டான் இப்போ நான் என்ன பண்ணனும்?. ஆம்புலன்ஸ் டிரைவர் : இப்போவே நாங்க வர்றோம். உங்க ஃப்ரெண்ட் முதல்ல செத்துட்டார்ன்னு கன்ஃபார்ம் பண்ணி சொல்லுங்க. சிறிது நேரத்தில் ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்டது. வேட்டைக்காரன் : கன்ஃபார்ம் சார் செத்துட்டான்.

Two hunters are out in the woods when one of them collapses. He doesn't seem to be breathing and his eyes are glazed. The other guy whips out his phone and calls the emergency services. He gasps: "My friend is dead! What can I do?" The operator says: "Calm down, I can help. First, let's make sure he's dead." There is a silence, then a shot is heard. Back on the phone, the guy says: "OK, now what?"

ஆய்வாளர் இந்த முடிவை வெளியிட்ட பிறகு, "பல ஜோக்குகள் அதிக மதிப்பைப் பெற்றன. அதிகம் சிரிக்க வைத்தன. ஆனால் மக்கள் அதிகமாக இதை தான் சிறந்த ஜோக் என்று சொல்லியிருந்தனர்" என்றார்

ஒரு நல்ல ஜோக் தன்னுள் 3 காரணிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

1. அது ஜோக்கை படிப்பவரை சிறந்தவராக உணர வைக்க வேண்டும்.

2. இரண்டாவது, படிப்பவருக்கு இருக்கும் பதட்டத்தையும் உணர்ச்சிகளையும் குறைக்க வேண்டும்.

3. படிப்பவரை சர்பிரைஸ் செய்ய வேண்டும்.

இந்த மூன்று காரணிகளும் வேட்டைக்காரன் ஜோக்கில் இருப்பதால் இது நல்ல ஜோக் என்கிறார்கள்.

அத்துடன் ஆங்கிலத்தில் 103 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நல்ல ஜோக் இல்லை என்ற கருத்தும் உண்டு, வேட்டைக்காரன் ஜோக் 102 வார்த்தைகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?