Khaby Lame
Khaby Lame Twitter
Wow News

Khaby Lame : முதன்முதலாக வீடியோவில் பேசிய கேபி லேம் - வாயடைத்துப் போன இணையவாசிகள்

Antony Ajay R

மியூசிகலி, டிக் டாக் செயலிகள் மூலமாக 15 வினாடி மட்டுமே கொண்ட வீடியோக்கள் பிரபலமடைந்தன. மிகவும் சிறிய நேரத்தில் ஒரு கருத்தை காண முடிவதாலும் அதிக நேரம் செலவிட முடிவதாலும் இதற்கு பார்வையாளர்கள் குவிந்தனர்.

இந்த சிறிய வீடியோக்கள் வேகமாகப் பரவி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் ஷார்ட் வீடியோஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என பல விதங்களில் நம்மை வந்தடையத் தொடங்கிவிட்டன.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எளிதாக வீடியோக்கள் எடுக்க முடிந்தது. இதனால் வீடியோக்களை உருவாக்கும் கிரியேட்டர்கள் அதிகமாகினர். 15 வினாடி வீடியோ என்பதால் அதிகம் மெனக்கெடவும் வேண்டாம்.

இப்படியான காலமாற்றத்தால் இரண்டு வித நிகழ்வுகள் நடைபெற்றன. முதலாவது தெருவுக்கு ஒரு கிரியேட்டர் உருவாகத் தொடங்கினார். அவர் தனக்கெனத் தனி ரசிகர்களைக் கொண்டிருந்தார்.

இரண்டாவது, ஒரு கிரியேட்டரால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர முடிந்தது. கேபி லேம் இதில் இரண்டாவது ரகம்.

சிறிய வீடியோக்களைக் கொண்டு மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவரானார் கேபி லேம். இவரை பல மில்லியன் மக்கள் பின்தொடர்ந்தனர்.

தற்போது 21 வயதாகும் கேபி லேம் தான் உலகில் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட டிக்டாக்கர் 145.4 மில்லியன் மக்கள் இவரை பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 78.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.

எங்கோ இத்தாலியில் வசிக்கும் இவரது ரீல்கள் தான் இந்தியாவிலிருக்கும் நம்மையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த அதிசயம் எப்படி நடக்கிறது தெரியுமா?

கேபி லேமின் காமடிகளுக்கு மொழி கிடையாது. நாம் அன்றாடம் செய்யும் செயல்களை மற்றும் லைஃப் ஹேக் வீடியோக்களை எப்படி எளிமையாக செய்வது என்பதை தனது கிளாஸான ரியாக்‌ஷனுடன் செய்து சிரிக்க வைப்பது தான் அவரது ஸ்டைல்.

இப்படி மொழி இல்லாமல் காமெடி செய்வதாலேயே அவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர் கூட்டம் அதிகம். அவரது குரலை கேட்க வேண்டுமென்பது 145.4 மில்லியன் ஃபாலோவர்களின் ஆசையும் கூட. அது இப்போது நிறைவேறியிருக்கிறது.

Nas Daily எனும் கிரியேட்டர் இத்தாலி சென்று கேபி லேமுடன் பேச இத்தாலி சென்று அங்கு உருவாக்கிய வீடியோவில் தான் கபி லேம் முதல் முறையாக தனது குரலை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்த வீடியோ கேபி லேமின் மொத்த கதையையும் கூறுவதாக அமைந்திருக்கிறது. இதில் அவர் தொழிற்சாலையிலும், உணவகங்களில் வெயிட்டராகவும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதில் பேசியுள்ள கேபி, "உங்கள் வீடியோக்களின் தனித்துவம் என்ன?" என்ற கேள்விக்கு "My video is simple and easy" என பதில் சொல்லியுள்ளார்.

கேபி லேமின் குரலைக் கேட்ட இணையவாசிகள் திகைத்துப் போயினர். உண்மையில் அவர்தான் பேசியதா என தங்களுக்குளேயே கேட்டுக்கொண்டனர்.

ஒரு ஸ்மார்ட் போனும் கொஞ்சம் திறமையும் நல்ல கன்டென்டும் இருந்தால் போதும் ஒரு வெயிட்டர் கோடிகளுக்கு அதிபதியாகலாம் என கேபி வாயிலாக கூறுகிறது இணையம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?