9ம் வகுப்பு பாஸாக முடியாத நபரால் 200 கோடி மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது எப்படி?

Quick Heal நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் Quick Heal-ன் வாடிக்கையாளர்கள். ஒரு டிகிரி கூட இல்லாத கைலாஷ் எப்படி இந்த நிறுவனத்தைத் தொடங்கினார் எனப் பார்க்கலாம்.
9ம் வகுப்பு பாஸாக முடியாத நபரால் 200 கோடி மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது எப்படி?
9ம் வகுப்பு பாஸாக முடியாத நபரால் 200 கோடி மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது எப்படி?Twitter
Published on

ஐஐடி, ஐஐஎம், போன்ற தரமான நிறுவனங்களில் டிகிரி பெறாத ஒருவரால் நவீன உலகில் எந்த சாதனையும் செய்ய முடியாது என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது.

இதனை மாற்றும் வகையில் 9ம் வகுப்பைக் கூட நிறைவு செய்யாத ஒருவர் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி சாதித்துள்ளார்.

திறமை மட்டுமே சாதிப்பதற்கு தேவை எனக் கூறும் கைலாஷ் கத்கரின் கதையைக் காணலாம். இவர் புனேவைத் தலைமயகமாகக் கொண்டு Quick Heal என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Quick Heal நிறுவனம் பிற துறை நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. இதன் நிறுவனர்களில் ஒருவரான கைலாஷ், இப்போது நிர்வாக இயக்குனராகவும் (MD) செயல்பட்டு வருகிறார்.

அமெரிக்கா, ஜப்பான் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நிறுவனங்களும் இவரது வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

இப்போது கைலாஷ் கத்கரின் நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த 1993ம் ஆண்டு கைலாஷ் மற்றும் அவரது தம்பி சஞ்சய் கத்கரால் தொடங்கப்பட்டது.

ஒரு டிகிரி கூட இல்லாத கைலாஷ் எப்படி இந்த நிறுவனத்தைத் தொடங்கினார் எனப் பார்க்கலாம்.

9ம் வகுப்பு பாஸாக முடியாத நபரால் 200 கோடி மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது எப்படி?
Apple, Google நிறுவனங்கள் போட்டிப்போடும் இரண்டு ஐஐடி பட்டதாரிகள் - யார் அவர்கள்?

கைலாஷ் கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களை சரிபார்க்கும் வேலை செய்துவந்தார். அப்படிதான் கம்பியூட்டரும் அவருக்கு அறிமுகம்.

கணினி சம்பந்தமான பிரச்னைகள் குறித்து தேர்ந்த அறிவு அவருக்கு கிடைத்தது.

1990ம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறைவு செய்த தம்பி சஞ்சய் கத்கரை கமியூட்டர் இஞ்சினியரிங் படிக்க ஊக்குவித்தார் கைலாஷ்.

1993 முதல் இருவரும் இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். 1995ம் ஆண்டு இவர்கள் கம்பியூட்டர் சரி செய்யும் கடையை தொடங்கினர்.

9ம் வகுப்பு பாஸாக முடியாத நபரால் 200 கோடி மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது எப்படி?
சௌம்யா சிங் ராத்தோர் : 3000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை எப்படித் தொடங்கினார்?

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து CAT Computer Service Ltd என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். சொந்தமாக தங்களது ஆண்டி-வைரஸை உருவாக்கிய பிறகு நிறுவனத்தின் பெயரை Quick Heal என மாற்றினர்.

2010ம் ஆண்டு இவர்களது நிறுவனத்தில் Sequoia Capital என்ற முதலீட்டு நிறுவனம் 10 கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதன் பின்னர் அசுர வளர்ச்சி அடையத் தொடங்கிய Quick Heal இப்போது 200 கோடி மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியாத ஒருவரால் இத்தனைப் பெரிய விஷயத்தை சாதிக்க முடிந்த போது நம்மால் ஏன் நமக்கு பிடித்ததை சாதிக்க முடியாது?

9ம் வகுப்பு பாஸாக முடியாத நபரால் 200 கோடி மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது எப்படி?
இந்தியா: Apple நிறுவன ரிடெயில் ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா?- வியக்க வைக்கும் ரிப்போர்ட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com