ரிஷாத் நவ்ரோஜி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். ஆனால் இவரை அறிந்திருப்பவர்கள் மிகவும் சிலரே.
பெரும்பாலும் தன்னை ஒரு பணக்காரராக இல்லாமல் சூழலியல் ஆர்வலராக காட்டிக்கொள்ளும் நவ்ரோஜி, தனது பிரபலமான வணிகக் கூட்டமைப்பில் கூட அதிகமாக பங்கெடுக்கமாட்டாராம்.
சொந்த தொழில் இருந்தே விலகியிருந்தும் 23,000 கோடி சொத்துக்கு இவர் அதிபதியாக இருப்பது எப்படி? யார் இந்த ரிஷாத் நவ்ரோஜி?
இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமான கோத்ரேஜ் குறித்து நாம் கண்டிப்பாக அறிந்திருப்போம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்று நம் வீட்டிலும் இருக்கலாம்.
இந்த நிறுவனத்தின் முக்கியமான பங்குதாரர்களில் ஒருவர் ரிஷாத் நவ்ரோஜி. இவர் ஆதி கோத்ரேஜின் உறவினராவார்.
வாரிசு படத்தில் விஜய் மிகப் பெரிய நிறுவனத்தின் வாரிசாக இருந்தாலும் காடு, மலை என சுற்றித்திரிவார்.
அதேப்போல ஆண்டுக்கு 5.2 பில்லியன் வருமானம் தரும் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக இருந்தாலும், ஆடம்பர வாழ்க்கையை விடுத்து வனவிலங்குகள், பறவைகள் பாதுகாப்புக்காக உழைத்து வருகிறார் ரிஷாத் நவ்ரோஜி.
கோத்ரேஜின் சிஇஓ அல்லது எம்.டி ஆக இல்லாமல் போட்டோகிராப்பராகவும் சூழலியல் ஆர்வலராகவும் திகழ்கிறார்.
100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட கோத்ரேஜ் நிறுவனத்தை நடத்தும் குடும்பத்தின் உறுப்பினர் ரிஷாத் நவ்ரோஜி.
இவரது தந்தை கைகுஷ்ரு நவ்ரோஜி (கெகோ) பிரோஜ்ஷா கோத்ரேஜின் இரண்டாவது மகளான டோசா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கோத்ரேஜ் நிறுவனத்தின் ஏற்றுமதி வணிகத்தைக் கவனித்துக்கொண்டார்.
வெற்றிகரமான நிறுவனமாக திகழ அதிகமான நம்பிக்கை கூறியவராக ஒன்றாக பணியாற்ற வேண்டும். ஆனால் குடும்பத்தைச் சேர்ந்தவரே பறவைகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு திரிவது அதிருப்திக்குரியதாக தான் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இப்போது கோத்ரேஜ் குடும்பத்தின் தலைவராக இருக்கும் ஆதி கோத்ரேஜ், "ரிஷத் செய்வதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
நவ்ரோஜ் பிசினஸில் இருந்து விலகி இருந்தாலும் சமூகத்தில் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின் அரசாங்க கவுன்சிலில் பங்கு வகிக்கிறார்.
இந்தியாவின் வேட்டையாடப்படும் பறவைகளைப் பாதுகாப்பதில் அவர் பெரும் பங்கு வகித்துள்ளார்.
ரிஷாத் 2011-ல் ராப்டர் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளையை நிறுவினார்.
தி ஹிமாலயன் கிளப்பின் குழு உறுப்பினராகவும், டைகர் வாட்ச் ரன்தம்போரின் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust