"உங்கள் அறியாமை திகைப்பூட்டுகிறது" அஜய் தேவ்கன் கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகை

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஹிந்தி திணிப்பு குறித்த வாக்குவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், அஜய் தேவ்கனின் கருத்துக்கு நடிகை ரம்யா (எ) திவ்யா ஸ்பனதனா பதிலளித்துள்ளார்.
நடிகை ரம்யா
நடிகை ரம்யாTwitter
Published on

நான் ஈ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கிச்சா சுதீப். திரைப்பட விழா ஒன்றில் பேசிய அவர், “இனி இந்தி நாட்டின் தேசிய மொழி இல்லை” எனப் பேசியிருந்தார்.

சுதீப்பின் கருத்துக்கு இந்தியில் பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், "எனது சகோதரரே... ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்? ஹிந்தி முன்பும் இப்போதும் இனிமேலும் நமது தாய்மொழியாகத் தேசிய மொழியாக இருக்கும்" என ட்விட் செய்தார்.

நடிகை ரம்யா
“இந்தி நாட்டின் தேசிய மொழி இல்லை” - இணையத்தில் சண்டையிட்ட அஜய் தேவ்கன் மற்றும் சுதீப்
அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்
அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் சஞ்சீவ்Twitter

இதனைத் தொடர்ந்து சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் வாக்குவாதம் முற்றி இணையத்தை பரபரப்பாக்கியது. சுதீப்பின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் இயக்குநர் ராம் கோபால் வர்மா ஆகியோர் ட்விட் செய்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஹிந்தி திணிப்பு குறித்த வாக்குவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், அஜய் தேவ்கனின் கருத்துக்கு நடிகை ரம்யா (எ) திவ்யா ஸ்பனதனா பதிலளித்துள்ளார்.

ramya
ramyaTwitter
நடிகை ரம்யா
ஆங்கிலத்துக்கு மாற்றாக 'இந்தி'யா? - மக்கள் சொல்லுவது என்ன? | vox pop

தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தி தேசிய மொழி அல்ல. உங்கள் அறியாமை திகைப்பூட்டுகிறது. KGF, புஷ்பா. RRR போன்ற படங்கள் இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கலைக்கு மொழி தடையில்லை. உங்கள் படங்களை நாங்கள் ரசிப்பது போல நீங்களும் எங்கள் படங்களை ரசிக்க முயலுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் ரம்யா. கர்நாடக மாநிலம் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்திருக்கிறார்.

நடிகை ரம்யா
ஏ.ஆர்.ரஹ்மான் - காயத்ரி ரகுராம் : இந்தி படங்களுக்கு தமிழ் பாடல் பாட வேண்டிய தானே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com