AR Rahman -ஐ திட்டும் பெங்காலி மக்கள் - Pippa பாடலில் என்ன பிரச்னை? முழுமையான தகவல்கள்!

Kazi Nazrul Islam, கேட்பவர்களின் இரத்தம் அடக்குமுறைக்கு எதிராக கொதிக்கும் வண்ணம் இயற்றிய பாடலை ரஹ்மான் இலகுவான, நாட்டுப்புற-காதல் பாடல்போல மாற்றிவிட்டார் என அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
AR Rahman -ஐ திட்டும் பெங்காலி மக்கள் - Pippa பாடலில் என்ன பிரச்னை? முழுமையான தகவல்கள்!
AR Rahman -ஐ திட்டும் பெங்காலி மக்கள் - Pippa பாடலில் என்ன பிரச்னை? முழுமையான தகவல்கள்!Twitter
Published on

கடந்த நவம்பர் 10ம் தேதி அமேசானில் வெளியானது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பிப்பா திரையப்படம். 1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்ட கேப்டன் பல்ராம் சிங் மேத்தாவை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ராஜா கிருஷ்ணா மேனன் என்பவர் இயக்கிய இந்த திரைப்படத்தில் இஷான் கத்தர் மற்றும் முர்னால் தாக்கூர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிப்பா படத்தில் இடம்பெற்றுள்ள Karar Oi Louho Kopat என்ற பாடல் வங்காள தேச நாட்டவர்கள் மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்தவர்களிடையே கண்டனங்களைப் பெற்றிருக்கிறது.

இந்த கண்டனங்களுக்கு விளக்கம் அளித்த படக்குழு, "வேண்டுமென்றே அந்த பாடலை பயன்படுத்தவில்லை, எதிர்பாராத விபரீதத்துக்கு வருந்துகிறோம்" என அறிக்கை வெளியிட்டது.

Karar Oi Louho Kopat பாடல் வங்காள தேசம் தேசிய கவி கசி நஸ்ருல் இஸ்லாம் என்பவரால் எழுதப்பட்டது. இவரை வங்காளத்தின் அடையாளமாக பார்க்கின்றனர்.

Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக பல பாடல்களை கசி நஸ்ருல் இஸ்லாம் எழுதியுள்ளார். இவரை "புரட்சி கவிஞர்" என வங்காள மக்கள் புகழ்கின்றனர். இவர் சுதந்திர போராட்ட வீரர்களையும் அவர்களது போராட்டங்களையும் தியாகத்தையும் விளக்கும் புரட்சிகர பாடல்களை எழுதியிருக்கிறார்.

பிரிட்டிஷ் காலனியத்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக பாடியதால் இவர் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்.

AR Rahman -ஐ திட்டும் பெங்காலி மக்கள் - Pippa பாடலில் என்ன பிரச்னை? முழுமையான தகவல்கள்!
Ar Rahman : உண்மையான பெயர் திலீப் குமாரா? ஏஆர் ரஹ்மான் குறித்த 10 சுவாரஸ்ய உண்மைகள்

கசி நஸ்ருல் இஸ்லாம் எழுதி இசையமைத்த பாடலை பிப்பா படத்தில் மாற்றி இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான் இதனை அவமதிப்பாக கருதுகின்றனர்.

நஸ்ருல், கேட்பவர்களின் இரத்தம் அடக்குமுறைக்கு எதிராக கொதிக்கும் வண்ணம் இயற்றிய பாடலை ரஹ்மான் இலகுவான, நாட்டுப்புற-காதல் பாடல்போல மாற்றிவிட்டார் என அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

AR Rahman -ஐ திட்டும் பெங்காலி மக்கள் - Pippa பாடலில் என்ன பிரச்னை? முழுமையான தகவல்கள்!
AR ரஹ்மான் : "அங்கு நான் மட்டும் மாநிறமாக இருந்தேன்" - ஹாலிவுட் நாட்களை பகிர்ந்த இசை புயல்

நஸ்ருலினின் உறவினர்கள், வங்காள தேச பக்தர்கள், வங்காள பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கலைஞர்கள் என பல தரப்பில் இருந்து ரஹ்மானுக்கு எதிர்வினைகள் தொடுக்கப்படுகின்றன.

படத்தில் இருந்து இந்த பாடல் நீக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

AR Rahman -ஐ திட்டும் பெங்காலி மக்கள் - Pippa பாடலில் என்ன பிரச்னை? முழுமையான தகவல்கள்!
AR Rahman : இசை நிகழ்ச்சி ரத்து; 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரஹ்மான் நோட்டீஸ் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com