BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன?

ஒரு சாதாரண இந்திய நகரத்தில் இருக்கும் இளைஞனையும் இளைஞியையும் ஒரு K-Pop இசைக் குழு கவரும் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று. அத்தகைய மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டிய பிடிஎஸ் இசைக் குழுவின் 10வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன?
BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன?Twitter
Published on

BTS மட்டுமல்ல Girls Generation, Big Bang போன்ற பிற கொரிய K-Pop இசைக் குழுக்களும் உலக அளவில் பெயர்பெற்றிருக்கின்றன.

ஆனால் ஒரு சாதாரண இந்திய நகரத்தில் இருக்கும் இளைஞனையும் இளைஞியையும் ஒரு K-Pop இசைக் குழு கவரும் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று.

அத்தகைய மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டிய பிடிஎஸ் இசைக் குழுவின் 10வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த அளவு பிரபலமான எந்த மியூசிக் பேண்டும் இதுவரை இருந்ததில்லை என்றுதான் கூற வேண்டும்.

உலகின் மிகப் பெரிய இசை விருதாக கருதப்படும் கிராமி உள்ளிட்ட பல விருதுகளை பிடிஎஸ் இசைக் குழு பெற்றுள்ளது. இதுவரை 650க்கும் மேற்பட்ட விருதுகள் பிடிஎஸ் இசைக்குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 12 பில்போர்ட் மியூசிக் விருதுகள். வேறெந்த இசைக் குழுவும் பெறாத வகையில் ஒரே ஆண்டில் 3 விருதுகளைப் பெற்றது பிடிஎஸ் இசைக்குழு.

BTS என்பதன் விரிவாக்கம் Bangtan Sonyeondan இதற்கு ஆங்கிலத்தில் Bulletproof Boy Scouts என்று அர்த்தம்.

இந்த குழுவில் 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

RM

குழுவின் தலைவர். Kim Namooj என்பது அவரது பெயர். RM என்றால் Rap Monster. BTS பாடல்களில் வரும் பெரும்பாலான எழுச்சிமிக்க, காதல் கொஞ்சும் வரிகளை இவர்தான் எழுதுகிறார்.

பிடிஎஸ்ஸின் பெரும்பாலான பாடல்கள் கொரிய மொழியில் ஆங்கிலம் கலந்து தான் எழுதப்பட்டிருக்கும்.

JIM

Kim Seokjin பிடிஎஸ்ஸின் பாடகர் மற்றும் குழுவிலேயே அழகான நபராக கருதப்படுவர். பாடல்களுக்கு நடுவில் கண்ணடிப்பதையும் கேமராவுக்கு முத்தங்கள் வாரிவழங்குவதையும் பார்த்திருப்போம்.

BTS குழுவில் வயதான நபரும் இவர்தான்.

Suga

BTS குழுவின் மற்றொரு ராப் பாடகர். Min Yoongi என்பதும் இவரது பெயர் தான். பார்ப்பதற்கு சாஃப்டாக இருந்தாலும் இவரது ராப் உலகம் முழுவதும் உள்ள மேடைகளைப் பற்றி எரிய வைத்திருக்கிறது.

J-Hope

இன்னொரு ராப் பாடகர் மற்றும் இணையில்லாத நடன கலைஞர். இவரை Jung Hoseok என்றும் அழைக்கலாம்.

Jimin

24 வயதாகும் ஜிமின் பாடகர் மற்றும் நடன கலைஞர். Park Ji Min என்பது தான் அவரது பெயர்.

V

இவரும் ஒரு பாடகர் மற்றும் நடன கலைஞர். Kim Taehyung என்பது இவரது பெயர்.

Jungkook

Jeon Jungkook அல்லது ஜேகே. இவர் பாடகர், ரேப் பாடகர், இயக்குநர் மற்றும் எடிட்டர். இவர் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என மற்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த 7 பேரில் 5 பேர் தாங்கள் இண்ட்ரோவெர்ட் எனக் கூறியுள்ளனர். சரி இவர்களது கதைதான் என்ன?

2010ம் ஆண்டு பிடிஎஸ் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு விதத்தில் பிக் ஹிட் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தால் கண்டறியப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக பாடகர் சுகா ஆன்லைன் ஆடிஷன் மூலம் கண்டறியப்பட்டார். ஜங்குக் சூப்பர்ஸ்டார் கே என்ற நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர்களை Big Hit Entertainment நிறுவனம் இணைத்தது. பிடிஎஸ் உருவாவதற்கு முன்னர் இவர் பிக் ஹிட் எண்டர்டெயின்மெண்டில் பயிற்சிபெற்றனர்.

இந்த பயிற்சியானது ஒரு கல்லூரி வகுப்பைப் போல செயல்படும். பிடிஎஸ்ஸின் இளம் உறுப்பினரான ஜங்குக்க்கு பயிற்சியின் போது 14 வயதுதான்.

பிடிஎஸ் இசைக் குழுவை உருவாக்க 80க்கும் மேற்பட்ட நபர்களை பிக் ஹிட் நிறுவனம் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

2023ம் ஆண்டு 7 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட "No More Dream" பாடல் வெளியானது. இது 2 கூல் 4 ஸ்கூல் ஆல்பத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

முதல் பாடலே அவர்களுக்கு மிகப் பெரிய ஹிட்டாக அமையவில்லை. 2016ம் ஆண்டு வெளியான ப்லட் ஸ்வீட் அண்ட் டியர்ஸ் பாடல் தான் அவர்களுக்கு முதல் ஹிட்டாக அமைந்தது.

உலகளாவிய ரசிகர்களை அடையும் போது கொரிய மொழிக்கு இணையாக ஆங்கிலமும் பயன்படுத்தப்பட்டது. dynamite பாடல் 2020ம் ஆண்டு முழுவதுமாக ஆங்கிலத்தில் வெளியானது.

Butter

Blood Sweet & Tears

Fake Love

Spring Day

DNA

Fire

Dope

Boy with Love போன்ற பல ஹிட் பாடல்களை பிடிஎஸ் கொடுத்துள்ளது. BTS பெரிய அளவில் இளைஞர்களையும் டீனேஜர்களை சென்றடைய இசையைக் கடந்து அவர்களது வரிகள் முக்கிய காரணமாக இருக்கிறது.

Dope பாடலில்,

“I worked all night, every day

While you were out clubbing.” என்ற வரி பலரது ஃபேவரைட்.

விங்ஸ் பாடலில்,

“I believe in myself;

My back hurts in order to let my wings sprout.”

"நான் என்னை நம்புகிறேன்

என் முதுகு வலிக்கிறது எனக்கு சிறகுகள் முளைப்பதற்காக" என்ற வரி எனது பர்சனல் ஃபேவரைட்.

BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன?
கொரிய மொழியில் தமிழ் வார்த்தைகள்! - தமிழருக்கும் கொரியாவுக்கும் என்ன தொடர்பு?| Explained

பிடிஎஸ்ஸின் இன்னும் சில சிறந்த வரிகளை அறிமுகப்படுத்தலாம்,

Not Today பாடலில்,

“If you can’t fly, then run.

Today we will survive.

If you can’t run, then walk.

Today we will survive.

If you can’t walk, then crawl.”

பாரஸைட் பாடலில்,

“Who says a dream must be something grand?

Just become anybody

We deserve a life

Whatever, big or small, you are you after all.”

இப்படி எழுதினால் ஒட்டிமொத்த பிடிஎஸ் பாடல்களையும் எழுத வேண்டியது இருக்கும்.

BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன?
AR ரஹ்மான் : "அங்கு நான் மட்டும் மாநிறமாக இருந்தேன்" - ஹாலிவுட் நாட்களை பகிர்ந்த இசை புயல்

ஒரு கலை என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம்.

"நம் வாழ்வை, இந்த பிரபஞ்சத்தை இன்னும் துல்லியமாக, தெளிவாக, வித்தியாசமான கோணத்தில் அணுக கற்றுக்கொடுப்பது தான் ஒரு கலையின் வேலை" என நான் கருதுகிறேன்.

இந்த வேலையை பிடிஎஸ் பாடல்களை விட யார் செய்துவிட முடியும்?

BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன?
Vaisagh : Rant முதல் துணிவு வரை - இந்த 2கே கிட்ஸ் 'மனதின் குரல்' யார்?

பிடிஎஸ் குழுவின் வெற்றி சூத்திரம் Boyz with Fun பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது,

“I’m becoming weird.

You can’t go to the peak by being normal, baby.” சரிதானே சாதாரணமாக இருக்கும் யார் உச்சத்தை தொட்டுவிட முடியும்?

BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன?
DJ Black : இன்ஸ்டா ரீல்ஸில் அடிக்கடி வைரல் - யார் இந்த டிஜே பிளாக்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com