Chandramukhi 2: இதுவரை எத்தனை சந்திரமுகி படங்கள் வெளியாகியிருகின்றன? ஒரு Recap!

சந்திரமுகி திரைப்படம் இதுவரை பல மொழிகளில் வெளியாகியுள்ளது. கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் இரண்டாம் பாகமும் முன்னரே வெளியாகிவிட்டது.
Chandramukhi 2: மணிசித்திரதாழு டூ சந்திரமுகி - இதுவரை வெளியான முதல் பாகங்கள் - ஒரு Recap!
Chandramukhi 2: மணிசித்திரதாழு டூ சந்திரமுகி - இதுவரை வெளியான முதல் பாகங்கள் - ஒரு Recap!twitter
Published on

ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் சந்திரமுகி 2ஆம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 18 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி 2 வெளியாகியுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

சந்திரமுகி திரைப்படம் இதுவரை பல மொழிகளில் வெளியாகியுள்ளது. கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் இரண்டாம் பாகமும் முன்னரே வெளியாகிவிட்டது.

மணிசித்திரதாழு

1993ஆம் ஆண்டு மணிசித்திரதாழு திரைப்படம் மலையாளத்தில் இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் வெளியானது.இதில் மோகன்லால், சோபனா, சுரேஷ்கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இது பேய் படமாக இல்லாமல், சைக்கோ த்ரில்லராக எடுக்கப்பட்டிருந்தது. இதில் கங்கா கதாபத்திரத்தை ஆட்கொள்ளும் பேய் தமிழ் மொழி பேசும்படியாக கதையாக்கப்பட்டிருக்கும்.

Chandramukhi 2: மணிசித்திரதாழு டூ சந்திரமுகி - இதுவரை வெளியான முதல் பாகங்கள் - ஒரு Recap!
Rajinikanth: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் - ட்ரோல் செய்யும் இணையவாசிகள்

ஆப்தமித்ரா

அதன் பிறகு கன்னடத்தில் ஆப்தமித்ரா என்று இத்திரைப்படம் 2004ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் தான் முதன் முதலில் பேய் படமாக இக்கதையை டிராக் மாற்றியது எனலாம். இயக்குநர் பி வாசு இத்திரைப்படத்தை இயக்கினார்.

மறைந்த நடிகர் விஷ்ணுவர்தன், ரமேஷ் அரவிந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

சந்திரமுகி

தொடர்ந்து 2005ஆம் ஆண்டு இயக்குநர் பி வாசு தமிழில் இந்த திரைப்படத்தை சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

பாபா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் சந்திரமுகி. இதுவே அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்து மார்கெட்டை மீண்டும் உயர்த்தியது எனலாம்.

இதே திரைப்படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் இது ஹாரர் காமெடி படமாகவே எடுக்கப்பட்டது

Chandramukhi 2: மணிசித்திரதாழு டூ சந்திரமுகி - இதுவரை வெளியான முதல் பாகங்கள் - ஒரு Recap!
Chandramukhi 2: வேட்டையன் ராஜாவாக மிரட்டியிருக்கிறாரா ராகவா? சந்திரமுகி 2 எப்படி இருக்கு?

பூல் புலய்யா

அதே ஆண்டு பெங்காலி மொழியில் இந்த திரைப்படம் ராஜ்மொஹோல் என்ற பெயரில் வெளியானது. தொடர்ந்து 2007ஆம் ஆண்டு அக்‌ஷய் குமார் வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பில், பூல் புலய்யா என்ற பெயரில் இந்தியில் வெளியானது.

இந்த அனைத்து மொழி படங்களிலுமே பொதுவானதாக, பாதிக்கப்பட கங்கா கதாபாத்திரம் கட்டிலை ஒரு கையால் தூக்கும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது

இதன் பிறகு ரீமேக்குகள் வரவில்லை. இரண்டாம் பாகங்கள் வரத் தொடங்கின. கன்னடத்தில் நடிகர் விஷ்ணுவர்தனை வைத்தே முதல் பாகத்தின் கதையம்சத்தை ஒட்டி இரண்டாம் பாகம் வெளியானது. இதே கதையை தெலுங்கில் நடிகர் வெங்கடேஷை வைத்து ரீமேக் செய்தனர்.

இந்தியில், நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் இரண்டாம் பாகம் வெளியானது.

இந்நிலையில், இன்று சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

Chandramukhi 2: மணிசித்திரதாழு டூ சந்திரமுகி - இதுவரை வெளியான முதல் பாகங்கள் - ஒரு Recap!
Jailer: "படம் சுமார் தான்" ஜெயிலர் வெற்றி விழாவில் என்ன பேசினார் ரஜினிகாந்த்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com