பாக்கியலட்சுமி டு பாண்டியன் ஸ்டோர்ஸ் - கதாநாயகிகளின் சம்பளம் என்ன தெரியுமா?

மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியல் ஹீரோயின்களின் சம்பளம் இது தானாம்!
பாக்கியல்க்ஷ்மி டு பாண்டியன் ஸ்டோர்ஸ் - கதாநாயகிகளின் சம்பளம் என்ன தெரியுமா?
பாக்கியல்க்ஷ்மி டு பாண்டியன் ஸ்டோர்ஸ் - கதாநாயகிகளின் சம்பளம் என்ன தெரியுமா?ட்விட்டர்

தொலைக்காட்சி தொடர்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கின்றன. அன்றாடம் நம் வீடுகளில் நடப்பவற்றைச் சுற்றியோ, நம்முடன் இருப்பவர்களின் சாயலில் கதைகள் இருப்பதாலேயே எளிதில் இவற்றுடன் ஒன்றிவிடுகிறோம்.

சிலர் இதில் நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் அப்படிதான் இருக்கிறார்கள், அவர்கள் நடிகர்கள் இல்லை என்று நினைக்கும் அளவிற்கு சீரியல்கள் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன.

இந்த சீரியலில் நடிப்பவர்களுக்கு என்ன சம்பளம் இருக்கும் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?

தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியல் ஹீரோயின்களின் சம்பளம் இது தானாம்!

சுசித்ரா - பாக்கியலட்சுமி

தற்போது விஜய் டிவியின் முன்னணி தொடராக இருப்பது பாக்கியலட்சுமி. தன்னை மதிக்காத கணவனை திறனால் எதிர்கொள்ளும் ஒரு இல்லத்தரசியின் கதை. பாக்கியலட்சுமியின் புரட்சிகரமான கதைக்களம் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இதில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சுசித்ரா. இவரது தினசரி சம்பளம் தகவல்களின் அடிப்படையில் ரூ.12,000.

வினுஷா தேவி - பாரதி கண்ணம்மா

பல ஆண்டுகளாக திரையிடப்பட்டு வந்த முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது பாரதி கண்ணம்மா. முதல் சீசனில் ரோஷினிக்கு பதிலாக களமிறக்கப்பட்ட வினுஷா தேவி தான் இதிலும் ஹீரோயின்.

இவரது தினசரி ஊதியம், ரூ.8000 என தகவல்கள் வெளியாகியுள்ளது

சுஜிதா - பாண்டியன் ஸ்டோர்ஸ்

நான்கு அண்ணன் தம்பிகள், அவர்களின் மனைவிகள் என தொடங்கிய குடும்பக் கதையான பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு ரசிகர்கள் ஏராளம். இதில் கதாநாயகியாக நடிப்பவர் சுஜிதா தனுஷ். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றும் நடித்து வருகிறார். இவரது ஒரு நாள் ஊதியம் ரூ.15,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது

பாக்கியல்க்ஷ்மி டு பாண்டியன் ஸ்டோர்ஸ் - கதாநாயகிகளின் சம்பளம் என்ன தெரியுமா?
நயன்தாரா முதல் சமந்தா வரை: அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைள் - எவ்வளவு தெரியுமா?

நக்ஷத்திரா நாகேஷ் - தமிழும் சரஸ்வதியும்

பல ஆண்டுகளாகவே சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து வரும் நக்ஷத்திரா நாகேஷ், நாயகியாக அறிமுகமாகியுள்ள தொடர் தமிழும் சரஸ்வதியும். இதில் நடிக்க இவருக்கு தினசரி சம்பளமாக ரூ.10,000 வழங்கப்படுவதாக கூறப்படுகிறது

பாக்கியல்க்ஷ்மி டு பாண்டியன் ஸ்டோர்ஸ் - கதாநாயகிகளின் சம்பளம் என்ன தெரியுமா?
ஷாருக் கான் டு அமிதாப் பச்சன்: அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் பிரபலங்களின் Bodyguards

ரேஷ்மா பசுபுலெட்டி - பாக்கியல்க்ஷ்மி

பாக்கியலக்ஷ்மி சீரியலின் மற்றொரு நாயகி ரேஷ்மா பசுபுலெட்டி. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் பிக் பாஸிலும் தோன்றினார். பாக்கியலக்ஷ்மியில் நடிக்க இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.7,000 ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது

பாக்கியல்க்ஷ்மி டு பாண்டியன் ஸ்டோர்ஸ் - கதாநாயகிகளின் சம்பளம் என்ன தெரியுமா?
1983 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அணி வீரர்களின் சம்பளம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com