Kamal Haasan: மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் பேசும் படம் - எப்போது ரிலீஸ் ?

வசனங்கள் தான் இல்லை. சுற்றுச் சூழல் ஒலிகள், ரேடியோவில் பாடல்கள் ஒலிக்கும். வாகனங்களின் ஒலிகள் கேட்கும். ஆகையால், இயக்குநர் சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "இது சைலன்ட் படம் அல்ல. வசனங்களற்ற படம். அவ்வளவு தான்."
Kamal Haasan: மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் பேசும் படம் - எப்போது ரிலீஸ் ?
Kamal Haasan: மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் பேசும் படம் - எப்போது ரிலீஸ் ?twitter

நடிகர் கமல்ஹாசனின் பேசும் படம் திரைப்படம் மீண்டும் திரையரங்கங்களில் வெளியாகிறது.

கமல்ஹாசன், அமலா நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேசும் படம். சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், புஷ்பக விமான என்ற பெயரில் வெளியானது. அதேபோல, தெலுங்கில் புஷ்பக விமானம் என்றும், மலையாளத்தில் புஷ்பக விமானம் எனவும், இந்தியில் புஷ்பக், மற்றும் தமிழில் பேசும் படம் என்று வெளியானது.

ஆனால், இந்த படத்தின் சிறப்பம்சமே இது ஒரு வசனங்களற்ற திரைப்படம் என்பது தான்! ஆம், இந்த படத்தில் வசனங்கள் இல்லை.

Kamal Haasan: மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் பேசும் படம் - எப்போது ரிலீஸ் ?
Leo Leo Leo! : இன்று முதல் அப்டேட் - உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிறகு ஏன் இத்தனை மொழிகளில் ரிலீஸ் ஆனது என்று லாஜிக்காக நீங்கள் கேட்கலாம்.

வசனங்கள் தான் இல்லை. சுற்றுச் சூழல் ஒலிகள், ரேடியோவில் பாடல்கள் ஒலிக்கும். வாகனங்களின் ஒலிகள் கேட்கும். ஆகையால், இயக்குநர் சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "இது சைலன்ட் படம் அல்ல. வசனங்களற்ற படம். அவ்வளவு தான்."

இந்த திரைப்படத்திற்கு எல் வைத்தியநாதன் பின்னணி இசையமைத்திருக்கிறார்.

வெளியான சமயத்தில், திரைத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது இந்த திரைப்படம். கதாபாத்திரங்கள் செய்கைகள் மூலமாக தான் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்கின்றனர். இந்த படத்தின் கதாபாத்திரங்களுக்கு பெயர் இல்லை. அவர்களின் பாத்திரமே நமக்கு அடையாளம்.

தனது பன்மொழி பேச்சு திறனுக்காக நன்கு அறியப்படும் உலகநாயகனின் வாயை கட்டிப்போட்ட படம் இது தான்! அந்த பெருமை சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவுக்கே சேரும்.

கன்னடத்தில் இந்த படம் வெளியான போது நல்ல வசூலை பெற்றது, மேலும் 35 வாரங்கள் திரையரங்கங்களில் ஓடியது படம்.

வேலை தேடி அலையும் ஒரு சராசரி இளைஞன். மேன்ஷனில் தங்கி, வேலை தேடிக்கொண்டிருக்கிறான். ஒரு நாள் இன்டெர்வியூவுக்கு போனால், மறு நாள் போட்டுக்கொள்ள சட்டையில்லை. ஒரே சட்டையின் அக்குளை மட்டும் சுத்தம் செய்து அதே துணியை அணிந்து வெளியில் செல்கிறான்.

அரை கிளாஸ் டீயை, காக்கா தண்ணீர் குடித்த கதையில் வருவது போல சில்லறைகள் போட்டு நிரப்பி முழு கிளாஸாக மாற்றி மனதை திருப்தி செய்துகொள்ளும் அவல நிலை.

ஒரு நாள், தற்செயலாக, குடிபோதையில் மயங்கி கிடக்கும் பணக்கார பிசினஸ் மேனை பார்க்கிறான். அவனிடம் ஒரு பணக்கார ஓட்டலின் சாவி இருக்கிறது. அதை பெற்றுக்கொண்டு, அந்த வியாபாரியின் பெயரில் இவன் அறையில் தங்குகிறான். மயங்கி கிடக்கும் வியாபாரியை தனது அறையில் அடைத்து வைக்கிறான்.

இந்த ஆள் மாறாட்டம் மூலம் கிடைக்கும் காதல், இந்த ஆள் மாறாட்டம் இந்த இளைஞனை எங்கே கொண்டு போகிறது, என்னென்ன ஆபத்துகள் வருகின்றன என்பதாய் நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பார் இயக்குநர் தான் கதை!

Kamal Haasan: மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் பேசும் படம் - எப்போது ரிலீஸ் ?
Kamal Haasan: விக்ரம் வெற்றியின் தாக்கம் - இளம் இயக்குநர்களுடன் இணைய விரும்பும் நாயகன்!

திரைத்துறை பார்த்த டார்க் காமெடி படங்களில் இது ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.

இந்த பேசும் படம் சிறந்த பொழுதுபோக்குக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றது. மேலும் பல விருதுகளையும் வென்றது இந்த திரைப்படம்.

தற்போது நாம் பார்த்து வளர்ந்த பல வின்டேஜ் ஹீரோக்களின் படம் எல்லாம் ரீ ரிலீஸ் ஆகி வருகிறது. சமீபத்தில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பேசும் படம் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.

Kamal Haasan: மீண்டும் வெளியாகும் கமல்ஹாசனின் பேசும் படம் - எப்போது ரிலீஸ் ?
Kamal Haasan: அமிதாப் பச்சன், பிரபாஸுடன் இணையும் உலக நாயகன் - வில்லன் கதாபாத்திரமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com