சமீபத்தில் பாலிவுட் படங்களில் நடிக்காதது குறித்து “ அவர்களால் என்னை ஈடுகட்ட முடியாது” என நடிகர் மகேஷ் பாபு பேசியது சர்ச்சையானது. அதற்கு இணையத்தில் பல எதிர்வினைகள் வரத் தொடங்கின.
மேஜர் திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய மகேஷ் பாபு, ''நான் திமிருடன் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். இந்தியில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவர்களால் என்னை நடிக்க வைக்க முடியாது என நினைக்கிறேன். பாலிவுட்டில் நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு திரையுலகில் எனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்தும் காதலும், வேறு துறைக்குச் செல்ல வேண்டும் என்று நினைக்க விட்டதில்லை….'' எனப் பேசினார்.
இந்த கருத்தை நெட்டிசன்கள் ட்விட்டரில் கலாய்க்கத் தொடங்கினர். பாலிவுட் பிரபலங்களும் இதற்கு எதிர் கருத்துக்களைத் தெரிவித்தனர். பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமா இடையிலான சர்ச்சை இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அதிகரித்து வரும் நிலையில் மகேஷ் பாபுவின் இந்தக் கருத்து எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், பாலிவுட்டை அவமதிப்பதாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர்.
அதன் பிறகு மகேஷ் பாபு வெளியிட்ட அறிக்கையில் தான் அனைத்து மொழிகளையும் மதிப்பதாகவும் சினிமாவை நேசிப்பதாகவும் கூறினார். தான் வேலை பார்க்கும் திரைத்துறையில் வசதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததையும் அந்த அறிக்கை கூறியது.
ஆனால் பாலிவுட் வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லும் முதல் நடிகர் இல்லை மகேஷ் பாபு. இவருக்கு முன்பும் பல டாப் ஹீரொ ஹீரொயிங்கள் வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளனர்.
சரி இதுவரை எத்தனை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்கள் பாலிவுட் படங்களில் நடிக்க மறுத்திருக்கிறார்கள் தெரியுமா? அந்த பட்டியல் மிக நீளமானது. அதிலிருந்து டாப் 5 நடிகர்களை இப்போது பார்க்கலாம்.
பலமுறை பாலிவுட் வாய்ப்புகள் நயனின் கதவுகளைத் தட்டியிருக்கின்றன. ஆனால் பல்வேறு காரணங்களால் நயன்தாரா அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் கூட ஒரு சிறிய போஷனில் குத்தாட்டம் போட்ட நயன் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் 1234 பாடலுக்கு ஆட மறுத்தார்.
இயக்குநர் கபீர் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் திரைப்படத்தில் நடிக்க புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட அல்லு அர்ஜுனுடன் பேசப்பட்டது. ஆனால் அவர் மறுத்ததால் சல்மான்கான் அந்த படத்தில் நடித்தார்.
கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பெயர் பெற்ற நடிகர் யஷ் -க்கு 2019ல் லால் காப்டன் பட வாய்ப்பு வந்தது. அதனை அவர் மறுத்துவிட்டதால் சயிஃப் அலி கான் அந்த படத்தில் நடித்தார்.
பாலிவுட்டில் அஜய் தேவகனுடன் நடிக்க 2011ம் ஆண்டு சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது. அதன் ஒரிஜினலான சிங்கம் படத்தில் அனுஷ்கா நடித்திருந்தாலும் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இதனால் அந்த பாத்திரத்தில் காஜல் நடித்திருந்தார்.
கன்னட நடிகரான தர்ஷன் சல்மான்கானின் தபாங் 3 திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததைத் தொடர்ந்து சுதீப் அந்த பாத்திரத்தில் நடித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp