ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்தவர் IAS அதிகாரியானது எப்படி - ஒரு வாவ் ஸ்டோரி!

பெரும்பாலான இளைஞர்களைப் போல. எந்த திட்டமும் இல்லாமல் ஒரு‌ இளங்கலை படிப்பில் சேர்ந்திருக்கிறார். அரசு ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தும் லட்சியத்துக்காக அதனை உதறியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்தவர் IAS அதிகாரியானது எப்படி - ஒரு வாவ் ஸ்டோரி!
ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்தவர் IAS அதிகாரியானது எப்படி - ஒரு வாவ் ஸ்டோரி!Twitter
Published on

குஜராத் மாநிலம், பஷூர் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேரா தனது பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 36 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்கள் தான் பெற்றிருக்கிறார். கல்லூரியில் சேரும்போது பெயரை எழுதுவதில் கூட பிழை செய்த அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆனது எப்படி?

மதிப்பெண்களுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்று கருதும் இவர், "எனது உறுதியான நம்பிக்கையும், கடின உழைப்பும் தான் என்னை உயர்த்தின" என்கிறார்.

குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலுள்ள சோட்டிலா கிராமத்தைச் சேர்ந்த தல்பத்பாய் - கௌரிபென் இணையரின் மூத்த மகன் துஷார் சுமேரா.

இவரது தாய் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார் என்றாலும் வாத்தியார் மகன் மக்கு என்பதற்கு அடையாளமாக சராசரி மாணவராகவே இருந்துள்ளார்.

பெரும்பாலான இளைஞர்களைப் போல. எந்த திட்டமும் இல்லாமல் ஒரு‌ இளங்கலை படிப்பில் சேர்ந்திருக்கிறார். ஆங்கிலத்தில் பலவீனமானவர் என்றாலும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலத்தையே தேர்வு செய்திருக்கிறார்.

கல்லூரியில் பேராசிரியர் குப்தா என்பவரின் அறிவுரைப்படி, தினமும் 3 மணி நேரம் ஆங்கில நாளிதழ்களை வாசித்து தனது ஆங்கில அறிவை வளர்த்துள்ளார் துஷார் சுமேரா.

நாளிதழ்கள் வாசிக்க வேண்டும் என்பது பள்ளியிலும் கல்லூரியிலும் ஆசிரியர்கள் சொல்லும் சாதாரண அறிவுரைதான். அதைக் கடைபிடிப்பவர்களின் வாழ்க்கைக்கும் கண்டுகொள்ளாதவர்கள் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது.

நாளிதழ்களைப் படித்ததன் மூலம் உலக பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகள், நாட்டு நடப்பு மற்றும் சர்வதேச நிகழ்வுகளைத் தெரிந்துகொண்டுள்ளார் துஷார் சுமேரா.

பின்னர் முதுகலைப்பட்டம் பெற்றார். கல்வியியலும் பயின்று அரசுத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அரசு வேலைதான் பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கும். ஆனால் துஷார் இன்னும் பெரிய கனவுகளைக் கண்டார்.

சுரேந்தர்நகர் மாவட்டத்தில் வளர்ச்சி அதிகாரியாக நியமிக்கப்பட்ட வினோத் ராவ் என்பவரை சந்தித்திருக்கிறார். அவரிடம் தனக்கு ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற விருப்பம் இருப்பதையும் தெரிவித்திருக்கின்றார்.

ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்தவர் IAS அதிகாரியானது எப்படி - ஒரு வாவ் ஸ்டோரி!
கணிதத்தில் 31 மார்க், மற்ற பாடங்களில் ஜஸ்ட் பாஸ் - வைரலாகும் IAS அதிகாரியின் மார்க் ஷீட்

துஷார் சுமேராவுக்கு உதவுவதாக உறுதியளித்த வினோத் ராவ், அவரது தந்தையை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். அவரிடம் அரசு வேலையில் இருப்பதை விட ஐ.ஏ.எஸ் அதிகாரியாவதன் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கியிருக்கிறார்.

இது துஷார் சுமேராவுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விரும்பும் இளைஞர்களுக்கு உதவும் அம்பேத்கர் பல்கலைகழக பேராசிரியர் மர்சண்ட் என்பவர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார் துஷார் சுமேரா. அவரை சந்தித்த பின்னர் அவரும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பான அரசு வேலையை விட்டுவிட்டு மாணவனாக ஐ.ஏ.எஸ் படிக்கத் தொடங்கும் கடினமான முடிவை எடுத்திருக்கிறார் துஷார் சுமேரா.

இந்த நேரத்தில் அவரால் படிப்பதற்கு விடுப்பு எடுத்திருக்க முடியும். ஆனால் அப்படி விடுப்பு எடுத்தால் தனது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதனால் வேலையை விட்டுவிட்டு படிக்கச் சென்றுள்ளார்.

ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்தவர் IAS அதிகாரியானது எப்படி - ஒரு வாவ் ஸ்டோரி!
சுரபி கௌதம் : ஆங்கிலம் தெரியாமல் கேலி செய்யப்பட்ட பெண் IAS ஆன கதை

தேர்வு நேரத்தில் கடினமாக படித்து வந்திருக்கிறார் துஷார். மறுபக்கம் அவரது குடும்பம் சவாலான காலத்தை கடந்து வந்துகொண்டிருந்திருக்கிறது.

துஷார் சுரேந்தர்நகரில் படித்துக்கொண்டிருந்த போது அவரது அப்பாவுக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. என்றாலும் குடும்பத்தினர் துஷாரின் படிப்புக்கு தடையாக இல்லை.

அவர் மூத்தமகனாக இருந்தபோதும் அவரது தம்பிகள் குடும்ப பாரத்தை சுமந்துள்ளனர். 5 ஆண்டுகள் தவக்காலம் போல படித்திருக்கிறார் சதுஷார். எந்த பண்டிகையிலும் ஈடுபடவில்லை, எந்த கொண்டாட்டமும் இல்லை, ஒரு நாள் கூட விடுப்பு இல்லாமல் படிப்பையே அனைத்திலும் முதன்மையானதாக நிறுத்தியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்தவர் IAS அதிகாரியானது எப்படி - ஒரு வாவ் ஸ்டோரி!
ஒரே வீட்டில் இரண்டு IAS இரண்டு IPS - ஓர் அடடே குடும்பம்

அதுவரை படித்த படிப்புகளில் கிடைத்த மதிப்பெண் சான்றிதழ்கள் தனக்கான அளவீடுகள் இல்லை என்பதை உறுதியாக நம்பி தன்னம்பிக்கையுடன் படித்துள்ளார் துஷார் சுமேரா.

"உங்கள் நம்பிக்கை, கடின உழைப்பு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவைதான் உங்களை வெல்ல வைக்கும்" என பிபிடி தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் துஷார் சுமேரா.

தனது வார்த்தைகளுக்கு தானே உதாரணமாக இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார் துஷார் சுமேரா.

ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36 மார்க் எடுத்தவர் IAS அதிகாரியானது எப்படி - ஒரு வாவ் ஸ்டோரி!
ஒரு நாளுக்கு 8 நிமிடம் தான் வேலை, 40 லட்சம் சம்பளம்: பணிமாற்றம் கோரும் IAS அதிகாரி - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com