உடலுறவு : 10 ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது செக்ஸ்
Sex
SexNews Sense

செக்ஸ் வெறும் இன்பத்தை மட்டும் கொடுப்பதில்லை. அது உங்களுக்குப் பல நன்மைகளையும் சேர்த்துத் தருகிறது. ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை உங்களுக்கு என்ன நன்மைகளைச் செய்திட முடியும். பதில்கள் இங்கே.

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது

"செக்ஸ் வாழ்க்கையில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு, குறைவான நோய்வாய்ப்பட்ட நாட்களே அவரது வாழ்க்கையில் வரலாம். அதாவது ஆரோக்கியமான நாட்கள் அதிகம், ஆரோக்கியமற்ற நாட்கள் குறைவு" என்கிறார் செக்ஸ் நிபுணரான Yvonne K. Fulbright, PhD.

தொடர்ச்சியாக உடலுறவு கொள்பவர்களுக்கு, கிருமிகள், வைரஸ்கள் மற்றும் பிற ஊடுருவல்களுக்கு எதிராக உங்கள் உடல் ஆரோக்கியமாக எதிர்த்துப் போராடும் வல்லமையைப் பெற்றிருக்கும். பென்சில்வேனியாவில் உள்ள வில்கெஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை உடலுறவு கொள்ளும் மாணவர்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிட்ட ஆன்டிபாடி அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். உடலுறவு கொள்ளாத கல்லூரி மாணவர்களுக்குக் குறிப்பிட்ட ஆன்டிபாடி குறைவாக உள்ளதாம்.

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாகச் செய்யும் மற்ற எல்லா விஷயங்களையும் செய்ய வேண்டும்:

  • சரியாகச் சாப்பிடுங்கள்.

  • உடற்பயிற்சி செய்யுங்கள்.

  • சுறுசுறுப்பாக இருங்கள்.

  • இரவு சீக்கிரம் தூங்குங்கள்.

  • போதுமான அளவு உறங்குங்கள்.

Sex
SexCanva

லிபிடோவை அதிகரிக்கிறது

மிகவும் கலகலப்பான பாலியல் வாழ்க்கைக்காக ஏங்குகிறீர்களா? "தொடர்ந்து உடலுறவு கொள்வது உடலுறவைச் சிறந்ததாக்கும் மற்றும் உங்கள் லிபிடோவை மேம்படுத்தும்" என்கிறார் லாரன் ஸ்ட்ரெய்ச்சர், எம்.டி. அவர் சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியின் ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் மகப்பேறியல் மற்றும் உதவி மருத்துவப் பேராசிரியராக இருக்கிறார்.

பெண்களைப் பொறுத்தவரை, உடலுறவு கொள்வதால் பிறப்புறுப்பில் லூப்பிரிகேஷன் தன்மை சீராக இருக்கும். ரத்த ஓட்டம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. இவை அனைத்தும் உடலுறவை நன்றாக உணரவைத்து, உடலுறவை அதிகமாக விரும்புவதற்கு உதவுகின்றன என்று அவர் கூறுகிறார்.

முதிய பெண்
முதிய பெண்Twitter

பெண்களின் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது

சிறுநீர் அவசரமாக வந்து அதை அடக்க முடியாமல் துணியில் அல்லது தரையில் சிந்தும்படி மோசமான நிலை முதியோருக்கு வரும். இந்த அடங்காமை தவிர்ப்பதற்கு வலுவான இடுப்புத் தளம் முக்கியமானது. ஆம், பெல்விக் தசைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இல்லாத, வலுவாக இல்லாத உடலால் சிறுநீரை அடக்க முடியாமல் போகும். பாத்ரூம் செல்வதற்குள் கீழே சிந்தும் நிலை வரலாம். இது 30% பெண்களை அவர்களின் வாழ்வின் ஒரு கட்டத்தில் பாதிக்கும். அதாவது முதிர்ச்சியான காலத்தில் பாதிக்கலாம்.

நல்ல உடலுறவு என்பது உங்கள் இடுப்புத் தளத் தசைகளுக்கு ஒரு பயிற்சி போன்றது. நீங்கள் உச்சக்கட்டத்தை அடையும்போது, ​​அந்தத் தசைகளில் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. நல்ல செக்ஸ் அவற்றை வலுப்படுத்துகிறது. இதனால் பெல்விக் தசைகளும் வலுவாகும். முதிர்ந்த வயதில் மேற்சொன்ன பிரச்சனைகள் பெண்களுக்கு வராமல் தவிர்க்கப்படும்.

Blood Pressure
Blood Pressure

Facebook

உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

செக்ஸ் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை பற்றி ஆராய்ச்சி கூறுகிறது. ஜோசப் ஜே. பின்சோன், எம்.டி. அவர் அமாய் வெல்னஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவ இயக்குனர். "குறிப்பாக உடலுறவு கொள்வதால் (சுய இன்பம் அல்ல) சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஒரு முக்கிய ஆய்வு கண்டறிந்துள்ளது."

உடற்பயிற்சியாகிறது

"செக்ஸ் என்பது உடற்பயிற்சியின் ஒரு சிறந்த வடிவம்" என்கிறார் பின்சோன். நல்ல செக்ஸ் டிரெட்மில்லை போல் வேலை செய்யாது. ஆனால், கலோரிகளை இழக்க உதவும்.

செக்ஸ் செய்வதால் நிமிடத்திற்கு ஐந்து கலோரிகளை இழக்கலாம். டிவி பார்ப்பதை விட நான்கு கலோரிகளை நீங்கள் கூடுதலாக இழக்கலாம். இது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் பல்வேறு தசைகளைப் பலப்படுத்துகிறது.

Heart Attack
Heart AttackNewsSense

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது

ஒரு நல்ல செக்ஸ் வாழ்க்கை உங்கள் இதயத்திற்கு நல்லது. இதயத் துடிப்பை அதிகரிக்க ஒரு சிறந்த வழி செக்ஸ். இது தவிர, செக்ஸ் உங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. "இவற்றில் ஏதேனும் ஒன்று குறைவாக இருக்கும்போது, ​​ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய் போன்ற பல சிக்கல்களைப் பெறத் தொடங்குவீர்கள்" என்று பின்சோன் கூறுகிறார். இந்த இரு ஹார்மோன்களை சமநிலையில் வைக்க செக்ஸ் உதவுகிறது. அடிக்கடி உடலுறவு கொள்வது உதவியாக இருக்கும்.

ஒரு ஆய்வின் போது, வாரத்திற்கு இரண்டு முறையாவது உடலுறவு கொள்ளும் ஆண்கள், அரிதாக உடலுறவு கொள்ளும் ஆண்களை விட இதய நோயால் இறக்கும் வாய்ப்புப் பாதியாக இருந்தது.

வலியைக் குறைக்கிறது

வலிக்கு நீங்கள் ஆஸ்பிரின் எடுப்பதற்கு முன், செக்ஸில் ஈடுபட்ட உச்சக்கட்ட இன்பத்தை அடைய முயற்சிக்கவும். இதுவே பெயின் கில்லர்தான். "புணர்ச்சி வலியைத் தடுக்கலாம்," என்கிறார் நியூ ஜெர்சியின் மாநிலப் பல்கலைக்கழகத்தின் ரட்ஜெர்ஸின் புகழ்பெற்ற சேவைப் பேராசிரியரான PhD. பேரி ஆர். கோமிசாருக்.

செக்ஸ் செய்து உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பது எப்படி வலிகளைப் போக்குமோ அதுபோலத் தூண்டுதல் விளையாட்டுகூட வலிகளைப் போகச் செய்ய முடியும். "யோனி தூண்டுதல் நாள்பட்ட முதுகு மற்றும் கால் வலியைத் தடுக்கும் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம், மேலும் பிறப்புறுப்பைச் சுய-தூண்டுதல் மூலம் மாதவிடாய் பிடிப்புகள், மூட்டுவலி மற்றும் சில சந்தர்ப்பங்களில் தலைவலி ஆகியவற்றைக் குறைக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் கூறியுள்ளனர்" என்று கோமிசாருக் கூறுகிறார்.

Sex
விந்தணுக்கள் குறைவது எதனால்? அதிகரிக்க என்ன செய்யலாம்? | Nalam 360

புரோஸ்டேட் புற்றுநோயைக் குறைக்கலாம்

செக்ஸ் வைத்துக்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க உதவும்.

அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் போது, அடிக்கடி விந்து வெளியேறும் ஆண்களுக்கு (ஒரு மாதத்திற்குக் குறைந்தது 21 முறை) புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்தப் பலனைப் பெற உங்களுக்குத் துணை தேவையில்லை: சுய இன்பம் கூடப் பலனளிக்கும். ஆனால், உடலுறவு கொள்வது மிகுதியான பலன்.

Sex
உடலுறவு : ‘ஃபிங்கரிங்’ செய்வது என்றால் என்ன? | Nalam 360
தூக்கம்
தூக்கம்Twitter


தூக்கத்தை மேம்படுத்துகிறது

உடலுறவுக்குப் பிறகு, நல்ல தூக்கம் வரும். " உச்சக்கட்ட இன்ப உணர்ச்சிக்குப் பிறகு, ப்ரோலாக்டின் என்ற ஹார்மோன் வெளியிடப்படுகிறது, இது உடலுறவுக்குப் பிறகு தளர்வு மற்றும் தூக்கம் போன்ற உணர்வுகளுக்குப் பொறுப்பாகும்" என்கிறார் ஷீனி அம்பார்டர், MD. அவர் கலிஃபோர்னியாவின் மனநல மருத்துவர்.

Depression
DepressionTwitter

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும். தொடுவதும் கட்டிப்பிடிப்பதும் உங்கள் உடலின் இயற்கையான "feel-good hormone" - ஐ வெளியிடும் என்று அம்பர்தார் கூறுகிறார். பாலியல் தூண்டுதல் மூளையின் ரசாயனத்தை வெளியிடுகிறது. மகிழ்ச்சி மனநிலையை மேம்படுத்துகிறது.

செக்ஸ் மற்றும் நெருக்கமுடன் இருப்பதால் உங்கள் சுயமரியாதையையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். சிறந்த செக்ஸ், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மருந்து மட்டுமல்ல, மகிழ்ச்சியான வாழ்வுக்கான மருந்தும்கூட…

Sex
Depression - மன அழுத்தம் தப்பிப்பது எப்படி? | Nalam 360

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com