கறிவேப்பிலையை ஓரம் கட்டுபவரா நீங்கள்? - இதோ உங்களுக்கான பதிவு!

தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்த உணவுப் பொருள் கறிவேப்பிலை. முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது சிறு வயதிலேயே உண்டாகும் இளநரைக்கும் கறிவேப்பிலை சிறந்தது
கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை பொடிCanva
Published on

பொதுவாக நாம் சமைக்கும் உணவுகளில் சுவைக்காகவும், நறுமணத்திற்காகவும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. ஆனால் அவை ஆரோக்கியம் தரும் இயற்கை மருந்து என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

பலரும் அதை சாப்பிடாமல் ஓரம் கட்டிவிடுவார்கள். கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்

பசியின்மையை போக்கும் கறிவேப்பிலை

கறிவேப்பிலை இலைகளை உலரவைத்து பின் அதை பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு, அதில் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு வேளை இந்தக் கலவையை சோற்றில் பிசைந்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்.

வாந்தி வருவதை கட்டுபடுத்தும்

சிலருக்கு பயணம் செய்தால் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். அவர்கள் பொதுவாக வாந்தி மாத்திரை போட்டுக் கொள்வார்கள். இன்னும் சிலர் எலுமிச்சையை பயன்படுத்துவார்கள்.

ஆனால் கறிவேப்பிலையும் வாந்தி வருவதை கட்டுபடுத்தும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? எலுமிச்சையோடு சேர்த்து கறிவேப்பிலையையும் முகர்ந்து பாருங்கள். நொடிப்பொழுதில் வாந்தி உணர்வு மறைந்துவிடும்.

கறிவேப்பிலை பொடி
ஆரோக்கியமான வாழ்வு : நோயற்று வாழ உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க 3 விதிகள்!

கொழுப்புகள் கரையும்

காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரையும்.

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

கறிவேப்பிலை பொடி
பாதாமை விட சிறந்தது! ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு - என்ன அது? எவ்வளவு பலன்கள்?

தலைமுடி வளர்ச்சி

கறிவேப்பிலையை தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால், முடி வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

இளநரைக்கு சிறந்த தீர்வு

தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்த உணவுப் பொருள் கறிவேப்பிலை. முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது சிறு வயதிலேயே உண்டாகும் இளநரைக்கும் கறிவேப்பிலை சிறந்தது.

கறிவேப்பிலை பொடி
அல்சர் : வயிற்றுப் புண்கள் யாருக்கு வராது? யாருக்கு வரும்? - தெரிந்து கொள்ள வேண்டியவை

இதய நோய்

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் பிரச்னையில் இருந்தும் பாதுகாப்பு தரும்.

இத்தனை பயன்கள் உள்ள கறிவேப்பிலையை இனிமேல் ஓரம் கட்டாமல் உணவோடு சுவைத்துச் சாப்பிடுங்கள்!

கறிவேப்பிலை பொடி
கல்லீரல் : உடலின் கெமிக்கல் தொழிற்சாலைக்கு ஆயிரம் நோய்கள் - எளிதான தீர்வு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com