ஒருவரின் உடலில் உள்ள ஒரு உறுப்பின் தோற்றத்திலோ அல்லது பல உறுப்புகளின் தோற்றத்திலோ ஏதோ ஒரு குறைபாடு இருப்பது போல் உணர்வதே இந்த உடல் டிஸ்மொரபிக் கோளாறு. பலருக்கும் இது போன்ற எண்ணம் இருக்கலாம் , ஆனால் இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த எண்ணம் மேலோங்கி இருக்கும். கண்ணாடி முன் அதிக நேரம் செலவழிப்பார்கள், தன்னை பற்றிக் குறைந்த மதிப்பீட்டுடன் இருப்பார்கள், இவர்கள் தன்னம்பிக்கை இதனால் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு சிலருக்கு இது இயல்பு வாழ்க்கையையே பாதித்து விடும் . இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் .இந்தியாவில் வருடந்தோறும் 1௦ லட்சம் பேர் இதனால் பாதிக்கப் படுவதாகப் புள்ளி விவரம் சொல்கிறது.
முன்பு சொன்னது போல் இவர்கள் கண்ணாடி முன் அதிக நேரம் செலவழித்து இவர்களின் குறைகளை வெகு நேரம் கவனித்துக் கொண்டிருப்பார்கள் , இவர்களது நண்பர்கள் அல்லது உறவுகளிடம் பேசும்போது இவர்களின் உருவத்தை பற்றி இவர்களே குறை சொல்லிக்கொள்வார்கள் , மேடைகளில் பேச மற்றும் பங்கு பெறத் தயங்குவார்கள் , தங்கள் குறைகளை மறைக்க அதிக அளவிலான மேக்கப் , அழகு சாதனங்களைப் பயன்படுத்துவார்கள், சிலர் அறுவை சிகிச்சை வரை செய்து கொள்வதும் உண்டு. இவர்கள் அறுவை சிகிச்சை செய்தாலும் கூட பெரும்பாலானோருக்கு அது திருப்தி அளிக்காது , அடுக்கடுக்கான குறைகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.
சிறு வயதில் இருந்து தோற்ற கேலிக்கு உள்ளானவர்களுக்கு இது வரலாம் , ஆனால் இன்று, பலர் தன்னை டிவி மற்றும் இன்ஸ்டாக்ராம்மில் வளம் வரும் மாடல்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள் , ஆனால் இதில் வரும் படங்கள் அதிகமாக எடிட்டிங் , பில்டர் , ஸ்பெஷல் லைட்டிங் போன்றவைகளால் மெருகேற்றப்பட்டிருக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
நம் சினமாக்களும் இதற்கு ஒரு பெரிய பங்களிக்கிறது , தமிழ் படங்களில் வரும் ஹீரோயினிகள் பலர் தமிழ் இன சாயலே இல்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். யூரோசென்ட்ரிக் உடல் அமைப்பு எனக் கூறப்படும் வெண்மை நிறம் , கூர்மையான மூக்கு , அகண்ட கண்கள் , ஒல்லியான தோற்றம் , இவையே இங்கு பிரதானமாகப் போற்றப்படுகின்றன , இதைப் போன்ற பெண்களைத் திரையில் பார்த்துப் பார்த்து, இந்த அழகு தரநிலைகளில் பொருந்தாத பல பெண்களுக்கு இது ஒரு காழ்ப்புணர்ச்சியாக மாறிவிடுகிறது .
இந்த நோய் லேசான அறிகுறிகளுடன் இருந்தால் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் இதைப் பேசி counselling பெற்றுக்கொண்டு, தங்களின் தோற்றத்தைப் பற்றி நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதே போதுமானது . இந்த நோய் தங்கள் இயல்பு வாழ்வையே பாதிக்கும் அளவுக்குக் கடுமையாக இருந்தால் மனநல மருத்துவரைச் சந்தித்து counselling மற்றும் behavioural therapy எடுத்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும் .
ஒரு சமூகமாக நாம் இந்த மேற்கத்திய அழகு தரநிலைகளைப் புகுத்தாமல் அதனைத் தகர்த்து விட்டு , நம் தோலில் நம் பெருமையுடன் வாழ பழக வேண்டும் , அடுத்த தலைமுறையினருக்கு அதனைப் பயிற்றுவிக்க வேண்டும் , உருவக் கேலி மிகத் தவறான செயல் என்பதைச் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும் .ஆயிரம் மைல் கொண்ட பயணம் ஒரு அடி எடுத்தால் தான் தொடங்கும் என்று பழமொழி உண்டு , அதைப் போல் இந்த மாற்றத்திற்கு ஒவ்வொருவரும் பங்களித்தால் தான் இது சாத்தியமாகும்.
- Swetha
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust